பக்கம்:உலகத்தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் சிறப்பு

35

பெற்ற நாடு சுவிட்சர்லாந்து. அத்தனைக் காலமாக நடுநிலைமை நாடாக இயங்கி வரும் நாடு இது.

பிரான்ஸ் ஒரு பக்கமும், ஜெர்மனி எதிர்ப் பக்கமும் நின்று நடத்திய ஐரோப்பியப் போர்களின் போதும் நடுநிலைமை வகித்த நாடு. பின்னர், உலகப் போர்களின் போதும், எப்பக்கமும் சேராமல் தனித்து, நடு நிலைமைக் கொள்கையைப் பின்பற்றியது. இந் நாட்டிலுள்ள பிரஞ்சு மொழியினரால் பிரான்ஸின் பக்கம் நாட்டைச் சேர்க்க முடியவில்லை. அதேபோல் ஜெர்மானிய மொழியினரால் ஜெர்மனியின் பக்கம் நாட்டை இணைக்க முடியவில்லை. ஜெர்மனியும் இத்தாலியும் இணைந்து போராடியது தெரியும். அப்போதும் சுவிஸ்-ஜெர்மன் மொழியினரும், சுவிஸ்-இத்தாலிய மொழியினரும் கூட்டுச் சேர்ந்து, ஜெர்மனியக் கூட்டின் பக்கம் சுவிட்சர்லாந்தை இழுத்துக் கொண்டு போக முடியவில்லை என்று வரலாற்றை (சுருக்கப் படத்தை) நினைவு படுத்திக் கொண்டோம்.

மெய்தான்; இந்நாடு, கூட்டுச் சேராக் கொள்கையை முழங்கவில்லை. அதை மூச்சாக்கிக் கொண்டது. நெடுங் காலமாக அவ்வழியே இயங்குகிறது. எப்படி இயங்கு கிறது. இது?

சுவிஸ் மக்கள் மொழி அடிப்படையை வைத்துத் தங்களைப் பிரஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், இத்தாலி யர்கள் என்று பிரித்துக் கொள்ளவில்லை; பேசும் மொழி எதுவாயினும் வாழும் நாட்டுக் குடிகளாகி விட்டனர். சட்டப்படி மட்டுமன்று, சிந்தனைப்படியும். எனவே, சுவிஸ் மக்களது பற்று சுவிட்சர்லாந்துக்கே தங்கள் மொழி பேசும் ஆதிநாடு என்று சொல்லிக் கொண்டு சுவிஸ் மக்கள் யாரும் பிரான்சிடமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/34&oldid=480793" இலிருந்து மீள்விக்கப்பட்டது