பக்கம்:உலகத்தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உல்லாசப் பயணம்

37

‘வருந்துகிறோம்’ என்று இருவரும் கூற, எங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது.

‘வருந்துகிறோம்’ என்று தலை தாழ்த்திவிட்டு நாங்களும் நடந்தோம். அவர்களும் அதையே செய்தார்கள்.

எங்கள் பேச்சு, சுவிஸ் மக்களது அன்றாட வாழ்க் கையைப் பற்றிச் சுழன்றது.

அம் மக்கள் தத்தம் வேலையையே கவனிப்பவர்கள். ‘அண்டை வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்காதிருப்பதற்கே குட்டைக் கழுத்தைக்’ கொடுத்ததாக நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நம்மை இடித்துரைக் கிறார் நெட்டைத் கழுத்தைக் கொடுத்தாற்கூடப் பக்கத்தில் எட்டிப் பார்க்காத பக்குவம் படைத்த மக்கள், அம்மக்கள். பிறர் விவகாரங்களில் தலையிடுவது அவர்கள் மரபன்று. எனவே, குடும்பத்திற்குக் குடும்பம் சண்டையிடுவது அரிது; அரிதிலும் அரிது.


6 உல்லாசப் பயணம்

சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சுவிஸ் மக்கள். வங்கிக் கணக்கு வைக்காத மக்களே இல்லை எனலாம். காசு பணமாக வீடுகளில் பூட்டி வைப்பதோ, வெளியூர்களுக்கு எடுத்துச்செல்வதோ, அவர்கள் வழக்கமன்று. மாறாகச் சில்லறைச் செலவுகளுக்கான பணம் மட்டுமே ரொக்கமாகக் கையில் இருக்கும். மற்றப் பணத்தை வங்கியிலேயே வைத்திருப்பார்கள் தேவையான போதே வாங்கிக்கொள்வார்கள். கடைச் சாமான்களுக்கும், ஓட்டல் சாப்பாடுகளுக்கும், ‘செக்’ கொடுப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/36&oldid=480795" இலிருந்து மீள்விக்கப்பட்டது