பக்கம்:உலகத்தமிழ்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

தமிழ் எழுத்தாளர்களின் நன்மைக்காக, எழுத்தாளர்களின் சொந்த முயற்சியால், எழுத்தாளர்களே நடத்தி வருவது தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவுச் சங்கம். தமிழ் நாடு முழுவதும் பரவியிருக்கும் பல எழுத்தாளர் இதில் உறுப்பினராய் இருக்கின்றனர். இச் சங்கம் இதுவரை தமிழ் உறவு என்னும் வெளியீட்டு முத்திரையின் கீழ் 90 தமிழ் நால்களைப் பல துறைகளிலும் வெளியிட்டிருக்கிறது!.

இது 66வது நூலின் மூன்றாவது பதிப்பு.

பாரிசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குத் தமிழக அரசின் பிரதிநிதியாகச் சென்று வந்த சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள், தமது பயண அனுபவங்களையும் மாநாட்டு நிகழ்ச்சிகளையும் தமது எண்ணவோட்டங்களுடன் கலந்து சுவையாக அளித்துள்ளார்கள், நம் கருத்துகளிலும் எதிரொலிக்க வல்லவை. இவை; பதிக்கத்தக்கவை கூட.

இதனைச் சங்கத்தின் வாயிலாக வெளிக் கொணர இசைந்தமைக்குத் திரு. நெ. து. சுந்திரவடிவேலு அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் எழுத்தாளா தன்னம்பிக்கையுடன் தமது இலக்கிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு, தமிழ் உறவு நூல்களை வாங்கித் தமிழ் மக்களும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் பேராதரவு தரவேண்டுகிருேம்.


2/96. பெரிய தெரு,
சென்னை-5
20–7 – 1977
தமிழுறவாளர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/4&oldid=481266" இலிருந்து மீள்விக்கப்பட்டது