பக்கம்:உலகத்தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

உலகத் தமிழ்

போது அரும்பி மலர்ந்த நினைப்பு அது உதிர்ந்த இதழான அது மீண்டும் மனம் விசியது. நல்லவர் எவராவது செய்து முடிக்கட்டுமே!

விளையாடிய அலுப்புத் தீரக் கரையோரப் புல்வெளியில் உட்கார்ந்து, சாண்டவிச்சும், கொக்கோகோலாவும் சாப்பிடும் இளைஞர்களையும் கண்டோம். காகித உறைகளையும் மூடிகளையும் ஆங்காங்கே, அப்படியப்படியே போட்டுவிடுவதில்லை. குழந்தைகள் கூட, தாங்கள் உண்டு முடித்ததும் உறைகளையும் பிறவற்றையும் ஒழுங்காகத் திரட்டி எடுத்துக்கொண்டு போய், பக்கத்திலுள்ள குப்பைக்கூடையில் எறிந்துவிட்டு வருவதைக் கண்டு மகிழ்ந்தோம். வாயைக் கொப்பளிக்கிறேன் என்று எச்சில் தானம் செய்வோர் யாரும் என் கண்ணில் தென்படவில்லை.


7. கோட்டைவிட்ட கோட்டை

ன்னசிப் பாசறையை நாங்கள் விரைவில் மாற்றி விட்டோம்; மாண்புமிகு திரு. மதியழகனை வரவேற்கப் புறப்பட்டோம் வழியில் ஒரூரில் தங்கி, நாங்கள் உணவு உண்டுவிட்டு நேரே விமான நிலையத்திற்கு விரைந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடம் முன்னரே போய்ச் சேர்ந்தோம். அமைச்சர் வரும் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக அறிந்தோம். கா த்துக்கிடக்க விரும்பவில்லை. எனவே, நான் ஒட்டலுக்குச் சென்றேன். சிதம்பரநாதன் விட்டிற்குத் திரும்பினார். குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து என்னை மட்டும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்தை அடைந்தார் நண்பர் நாதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/43&oldid=480993" இலிருந்து மீள்விக்கப்பட்டது