பக்கம்:உலகத்தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டைவிட்ட கோட்டை

45


காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, அதற்கெதிரில் இருந்த மீட்டரில் காசைப் போட்டுவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்றோம்

மாண்புமிகு திரு. மதியழகனும், மாண்புமிகு திரு. பரூக் மரைக்காயரும் என்னையும், நான் அறிமுகப்படுத்திய நாதனையும் கண்டு பெரு மகிழ்வு கொண்டனர். வெளிநாடுகளில் இருக்கும்போது, அறிமுகமான யாராவது நம்மை வந்து அழைத்துப் போவார்களா என்னும் பேராவல் எழும். அது நிறைவேறிவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையேது? என்னேப்போன்று பல முறை பிற நாடு சென்று ஏங்கியவர்க்கே இவ்வுணர்ச்சியின் ஆழம் தெரியும்.

அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தோம். அவர்களை வரவேற்க நமது துாதுவரகத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார். உலக சுகாதார சபையில் பெரிய அதிகாரியாக உள்ள இலங்கைத் தமிழர் டாக்டர் சுந்தரம் என்பவரும் வந்திருந்தார். அவரது காரும் சிதம்பரநாதனின் காருக்கு அருகில் இருந்தது.

கார்களுக்கு அருகில் வந்ததும், நாதனின் காருக்கு இடப்புறம் நிறுத்தியிருந்த காரின் சொந்தக்காரர் நாதனிடம் ஏதோ கூறினார்

“ஆ! காசு தீர்ந்து விட்டதா? டிக்கெட் கொடுப்பதற்குமுன் வந்துவிட்டேன். நல்லவேளை; அபராதச் சீட்டு வரவில்லை” என்று படபடப்பாகக் கூறிக் கொண்டே, மீட்டரில் மீண்டும் காசு போட்டார்.

கார் நிற்கும் நேரத்தின் அளவிற்கேற்பக் காசு போட வேண்டும். போட்ட காசு தீர்ந்து விட்ட பிறகும் அங்கேயே நிற்க வேண்டுமானால் மீண்டும் காசு போட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/44&oldid=480994" இலிருந்து மீள்விக்கப்பட்டது