பக்கம்:உலகத்தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

உலகத் தமிழ்

வேண்டும். எனவே முற்பகலில், ஜினிவாவில் சில பகுதிகளைக் காட்டினோம் . பின்னர் விசைப்படகில் அமைச்சர்களோடு ஏரியில் பயணஞ் செய்தோம். அந்த விசைப் படகை ஒட்டியவர் கலகலப்பான பேர்வழி. வாட்ட சாட்டமான சிறுவன் ஒருவன் அப் பயணத்தில் எங்களோடு வந்தான். புகைப்படம் எடுக்க முயன்றோம். வெட்கப்பட்டான். கேப்டன்’ சிறுவனைச் சரிக்கட்டி, எங்களோடு நின்று படம் எடுத்துக் கொள்ளச் செய்தார்.

முந்திய நாள் மலர்க்கடிகாரத்தைக் கண்டபோது, புகைப்படமெடுக்கப் போதிய ஒளி இல்லை. எனவே ஞாயிறன்று எல்லோரும் சேர்ந்து, மலர்க்கடிகாரத்தின் அருகில் நின்று படம் பிடித்துக் கொண்டோம். அமைச்சர் இருவரும் காட்சிக்கு எளியவர், நட்புக்கு இனியவர் என்பதை அங்கிருந்தவர்களே உரைக்க முடியும்.

பிற்பகல் நானும் நாதனும் வெளியூர் போவதாகத் திட்டம் அப்போது நண்பர் சுந்தரம் அமைச்சர்களோடு இருந்து வழியனுப்புவதாக ஏற்பாடு. அதன் படி நண்பர் சுந்தரம் வீட்டிற்கு அமைச்சர்கள் சென்றார்கள். செல்லுமுன் நிதி அமைச்சர் என்னைத் தனியாக அழைத்துப் பேசினார்; உலகப் பல்கலைக் கழகச் சேவையின் பொது அவைக்கூட்டத்தைச் சென்னையில் நல்லபடி நடத்திக்கொடுக்கச் சொன்னார்; அரசினர் வேண்டிய நிதி உதவி செய்யக்கூடும் என்றார்; பாரிசில் சந்திக்கும் போது, நிதி உதவி கோரும் கடிதத்தைக் கொண்டு வரச் சொன்னார்.

நானும் நாதனும் அவரது விட்டிற்குச் சென்று திருமதி நாதனையும் செல்வன் குமாரையும் அழைத்துக் கொண்டு வடக்கு நோக்கி விரைந்தோம். சுவிஸ் நாட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/47&oldid=480997" இலிருந்து மீள்விக்கப்பட்டது