பக்கம்:உலகத்தமிழ்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நெடுநாளைய பழக்கத்தின் கொடுமையால் நாணி நாணி ஒதுங்கிப்பெரியவர்கள் கண்களில் படாமல் நிற்கும் என்னையும் பாரிசு மாநாட்டிற்கு அரசின் பிரதிநிதிகளில் ஒருவராக அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி. தமிழ் நாட்டின் தன்னேரிலாத முதல்வர், தமிழ்த் தாயின் தவப்புதல்வர், கலைஞர் கருணாநிதி அவர்களின் நல்லாதரவு. மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டிலும் நான் கலந்துகொள்ளும் நற்பேற்றினை நல்கிற்று. அப்பெரு மகனார்க்கு எப்படி நன்றி சொல்ல? கைம்மாறு கருதா மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு?

முன்றாம் உலகத் தமிழ் மாநாட்டில், மாணவனாயிருந்து கற்றதோடு, ‘கல்விபற்றிக் கவி பாரதி’ என்னும் தலைப்பில் கட்டுரையொன்றும் கொடுக்கும் நல் வாய்ப்பையும் பெற்றேன்.

மாநாட்டிற்குச் சென்ற போதும், மாநாட்டில் கலந்து கொண்ட போதும், பின்னரும் நான் கண்டவை பல; கேட்டவை பலப்பல. அவை என் உள்ளத்தில் எழுப்பிய எண்ணங்கள், தொடர் கட்டுரைகளாய் உருப்பெற்றன.

நான் கற்றுக்குட்டி எழுத்தாளன். எனவே, என் எழுத்துக்களில் உண்மை உறுத்துமளவிற்கு இலக்கிய நயம் இல்லாமல் இருந்தால் வியப்பிற்குரியதன்று: எனினும் உலகத் தமிழ் மாநாடு பற்றி நான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளை வெளியிட மனமுவந்து முன் வந்தார் ‘கல்கண்டு’ ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்கள். இருபது ஆண்டுகளாக கல்கண்டில் எழுத யாருக்கும் இடம் கொடாத தமிழ்வாணன் என்னத் தொடர்ந்து எழுத விட்டது என்னுடைய சிறப்பா? இல்லை. விளக்கஞ் சொல்ல முடியாத நற்பேறு. திரு. தமிழ்வாணன் கொடுத்த உரிமை இன்று ‘உலகத்தமிழ்’ என்னும் நூலாகக் காட்சியளிக்கிறது.

என் இளமைப் பருவத்தில், திரு. சேஷாசலம் அய்யர் அவர்கள் நடத்திய ‘கலா நிலையம்’ மூலம் என் தந்தை எனக்கு ஊட்டிய தமிழ்ப்பற்று. எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த நல்லாசிரியர்கள் திருவாளர் நரசிம்மாச்சாரி யாராலும், திருவாளர் நமச்சிவாய முதலியாராலும் காத்து வளர்க்கப்பட்டது. பண்டிதர் எஸ். எஸ். அருணகிரிநாதர், திரு. வி. க., மறைமலை அடிகளார். சோமசுந்தர பாரதியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய தமிழ்ப் பெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/5&oldid=481268" இலிருந்து மீள்விக்கப்பட்டது