பக்கம்:உலகத்தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

உலகத் தமிழ்


“இந்தப் பாடுபடுவதற்குப் பதில், வீட்டிலிருந்து நடந்தே வந்துவிடலாம் போலிருக்கிறது” என்றேன்.

“ஆம். நண்பர்கள் வரும்போது பயன்படவே கார்!” என்று புன்முறுவலோடு பதிலுரைத்தார்.

நண்பர்கள் என்றால் யார்? அவர்கள் எப்போதோ வருபவர்களா?

நண்பர்கள் பல நாட்டவர்கள். வாரத்திற்குப் பாதி நாள் யாராவது வந்து போய்க்கொண்டிருப்பார்கள். அவர்களோடு தொடர்பு கொண்டு திட்டமிட்டு ஊக்கு வித்துச் சேவை செய்வதே உலகப் பல்கலைக் கழகச் சேவையின் (உ.ப. சே.) வேலை.

அலுவலகக் கட்டடத்தை நெருங்கினோம் பழங்காலக் கட்டடமாகக் காட்சியளித்தது. பழைய கட்டடமோ? என்றேன். ஆம். மிகப் பழையது. பல நூற்றாண்டுகளுக்கு முன், கிறித்துவச் சமயாச்சாரியர்களுள் ஒருவராக விளங்கிய கால்வின் இக் கட்டடத்தில் இருந்தே சமயத் தொண்டாற்றினர்' என்று நாதன் விளக்கினார். அத் தெருவிற்குத் ‘கால்வின் தெரு’ என்று பெயர்.

பழம் பெரும் கட்டடத்தில், புதியதொரு மானுடத் தொண்டு நடக்கிறது; ஐம்பது ஆண்டுகளாக நடக்கிறது. எத்தகைய தொண்டு அது?

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுக் கால வரம்பில் முதல் உலகப்போர் நடந்தது. முன்னரெல்லாம் கண்டப் போராக இருந்தது அப்போது உலகப் போராக மூண்டது. விளைவு? சொல்லொணாத் துன்பம் எழுத முடியாத அழிவு: கணக்கிட முடியாத ஆட்சேதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/51&oldid=481001" இலிருந்து மீள்விக்கப்பட்டது