பக்கம்:உலகத்தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகப் பல்கலைக்கழகப் சேவை

57

இருந்தனர். அதுமட்டுமா? அலுவலில் முழ்கியிருந்தனர்!

“ஒன்பது மணி, அதிகாலையல்லவா?” என்று கேட்டேன்.

பல அலுவலகங்கள் 8-30 மணிக்கே தொடங்கி விடும் என்ற பதில் வந்தது. கல்விக்கூடங்களும் அவ்வளவு காலையில் தொடங்கி விடுமாம். பனிக் காலங்களில் கூட அப்படியாம்.

உலகப் பல்கலைக் கழகச் சேவையின் பொன் விழா அவைக் கூட்டத்தைச் சென்னையில் நடத்துவது என்று இரண்டு நாள்களும் காரில் பயணஞ் செய்யும்போது திட்டமிட்டோம். அதுபற்றிய நிகழ்ச்சி நிரல்கள், செயல் முறைகள், செலவுக் கணக்குகள், வருவாய் வழிகள் ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்தவற்றை நாங்கள் எழுத்து வடிவில் உருவாக்கினோம். அவற்றைத் தட்டெழுத்தாக்கினோம்.

தமிழ் நாட்டு அரசிடம் நிதி உதவி கோரும் கடிதத் தையும் ஆயத்தஞ் செய்தார் சிதம்பரநாதன்.

உ. ப. சே. ஐம்பதாண்டுக் காலமாகப் பல்கலைக் கழகப்பணி புரிந்துளது. எதிர்காலத்தில் பல்கலைக் கழகச் சமுதாயத்தைக் கொண்டு பொதுச் சமுதாயத்திற்குச் சேவை செய்ய வேண்டுமென்னும் எண்னம் கருக்கொண்டிருக்கிறது. எந்தச் சேவையைப் பொதுச் சமுதாயத்திற்குச் செய்வது? எவ்வளவு செய்வது? எப்படிச் செய்வது? இவற்றைப்பற்றிச் சென்னையில் நடக்கும் அவையில் முடிவு செய்வார்களென்று அறிந்தேன்.

இவ்வாண்டு அனைத்துலகக் கல்வி ஆண்டு. எனவே, கல்விபற்றிய பொதுச் சமுதாயச் சேவை பொருத்தமாக

உ. த.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/56&oldid=481006" இலிருந்து மீள்விக்கப்பட்டது