பக்கம்:உலகத்தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகப் பல்கலைக்கழகப் சேவை

59

பேருக்கு-எழுத்தறிவு ஊட்ட வேண்டுமென்பது அந்தத் திட்டம். எத்தனை ஆண்டுகளில் ஒரு கோடிப் பேருக்கு எழுதப் படிககச் சொல்லிக் கொடுப்பது? ஐந்தாண்டில் சொல்லிக் கொடுப்பதாகக் குறிக்கோள்.

அப்படியானால் ஆண்டிற்கு இருபது இலட்சம் மக்களுக்கு எழுத்தறிவு வரவேண்டும். இதற்கு முதியோர் நிலையங்கள் எத்தனை தேவை? நாற்பதாயிரம் முதியோர் கல்வி நிலையங்கள் தேவை. முதியோர் கல்வி பெற ஆறு மாதங்களே தேவை. ஒவ்வொரு முதியோர் நிலையமும் ஆண்டிற்கு இரு குழுக்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். குழு ஒன்றில் சராசரி இருபத்தைந்து பேர் இருக்கலாம்.

சுருங்கக் கூறின், 40,000 முதியோர் கல்வி நிலையங்களைத் தொடங்கி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பிரிவு முதியோரைச் சேர்த்துக் கொடுத்தால், வயது வந்தோர் அனைவரும் ஐந்தாண்டில் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வார்கள். இதற்கு எவ்வளவு செலவு? எட்டு, ஒன்பது கோடி ரூபாய்கள்; ஒர் ஆண்டுக்கு அன்று: ஐந்தாண்டுகளுக்கு பகுதி நேர ஆசிரியர்களுக்குச் சம்மானம்; விளக்குச் செலவு; நூல்கள், எழுது பொருள் வாங்கச் செலவு: கண்காணிப்புச் செலவு; அத்தனையும் சேர்ந்த மொத்தச் செலவு எட்டு, ஒன்பது கோடிகளே.

இதைக் கூறியதும் நாதனுக்குப் புதுத் தெம்பு. முதலில் முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினால் என்ன என்று நாதன் கேட்டார்.

சிறிதாகவோ பெரிதாகவோ தொடங்கிச் சோதனை செய்தல் நல்லது. இதுவே கற்றவர் மற்றவர்க்கு ஆற்றும் நன்றிக்கடன் என்று முடிவு செய்தோம். அதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/58&oldid=481008" இலிருந்து மீள்விக்கப்பட்டது