பக்கம்:உலகத்தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

உலகத் தமிழ்


ஆக்கி விடவில்லை. ‘மெட்ரோ’ (பாதாள இரயில்), பேருந்து வண்டிகள், வாடகைக் கார்கள் ஆகியவை ஞாயிறு விடுமுறையின் போது எவ்வளவு ஒடுமோ அவ்வளவு ஒடுகின்றன. இது நமக்குப் பாடம். மன்னிக்க வேண்டும். படிப்பதாக இருந்தால் அல்லவா?

கட்டிக்காக்க முளைப்பது ஆட்சி, அந்த ஆட்சி கால ஒட்டத்தில் பிறவி மன்னர் ஆட்சியாக இறுகிவிடுகிறது. மக்களை விட்டு எட்டிப் போய்விடுகிறது. சுற்றியிருப்போரின் சுழற்சியே ஆட்சியாகி விடுகிறது. இது முற்றினால் கட்டும் இல்லை; காவலும் இல்லை என்னும் நிலை வளரும்; வறுமையும் பசியும் வாட்டமும் கொதிப்பும் தொடரும். இவை, சிற்சில சமயங்களில் புரட்சியாக வெடிக்கும். பெரும் புரட்சியாகி ஆட்சி முறையையே மாற்றும். அப்படிப்பட்ட புரட்சியே பிரஞ்சுப்புரட்சி.

‘உரிமை, ஒருநிலை, உடன்பிறப்புணர்ச்சி’ என்னும் அரசியல் மறைமொழி இன்று பலரும் அறிந்தது அன்று. அது பிரஞ்சு மக்களின் விடுதலைப் பாணியாக ஒலித்தது.

உரிமை வேட்கை உந்த, பாரிசு மக்கள் திரண்டெழுந்து பாஸ்டீல் சிறையை நோக்கி நடந்தார்கள். அவர்களது போர்ப் பரணி வானைப் பிளந்தது. அம் மக்கள் எழுப்பிய புழுதிப்புயல் வானை முடிற்று.

அரண்மனையிலிருந்த பதினாறாம் லூயி மன்னர் மேல் மாடியிலிருந்து இதைக் கண்டார். இராணி ‘அன்டாய்னெட்’ உடன் இருந்தார். மக்கள் பெருங்கூட்டமாகி இப்படிக் கத்திக் கொண்டு திரிவதற்குக் காரணத்தை அறிய விரும்பினார். ரொட்டி இல்லேயென்று கிளர்ச்சி செய்ததாகக் கேள்விப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/65&oldid=481101" இலிருந்து மீள்விக்கப்பட்டது