பக்கம்:உலகத்தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரிசில் தமிழ் முழக்கம்

67


அரண்மனை வாழ்வு மட்டுமே அறிந்தவர் அல்லரா? நாட்டின் அவலமறியாதவர் அல்லரா? ஆயினும், நல்லவர் அல்லரா? நல்லவர் கருணைபுள்ளம் பேசிற்று. இதோ கேளுங்கள்:

“ஐயோ பாவம் ரொட்டியில்லாவிட்டால் ‘கேக்’ சாப்பிடுவது தானே! இதற்கேன் இப்படிக் கத்த வேண்டும்’ என்று பரிதாபத்தோடு ஆலோசனை கூறினர், அதன் விலையறியாத இராணி.

“அரிசி எங்கே கிடைக்கவில்லை? பங்கீட்டுக் கடையில் குறித்த விலைக்குக் கிடைக்காவிட்டால் என்ன? மூலைக்கு மூலை கூடையிலே அரிசி, கூடுதல் விலைக்குக் கிடைக்கிறதே?” இப்படி எங்கோ கேட்டது நினைவிற்கு வந்தால், அது என் குற்றமன்று; உங்கள் நினைவாற்றலின் குற்றம்.

பாரிசிற்குச் செல்வோம். வாருங்கள். ஜூலை 14 ஆம் நாள் காலை, பேராசிரியர் காசி நான் தங்கியிருக்த ஒட்டலுக்கு வந்தார். இருவருமாக வாடகைக் காரில் பேரணி நடக்கும் சாம்பலிசி என்னும் இடத்திற்குச் சென்றோம்.

குடியரசு நாளில் சென்னையில் அணிவகுப்பு நடப்பதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் பாரிசில் அவர்களது தேசியத் திருநாளன்று நடந்தது. பார்வையாளர்களுக்குத் தரத்திற்கு ஏற்றபடி, இடம் ஒதுக்கியிருந்தார்கள். அமர்ந்து காண வாய்ப்புப் பெற்றோர் உண்டு. நின்று காணச் சீட்டுப் பெற்றவர்கள் நாங்கள். இது அங்கே சென்ற பிறகே தெரிந்தது. அணிவகுப்பிற்கு முன் கோபித்துக்கொண்டு திரும்பி வந்துவிடவோ வழியில்லை. எனவே தமிழ் நாட்டுப் பிரதிநிதிகளாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/66&oldid=481125" இலிருந்து மீள்விக்கப்பட்டது