பக்கம்:உலகத்தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

உலகத் தமிழ்


“தமிழ் ஆராய்ச்சி, பூரண உயிர்த்துடிப்புள்ள ஒரு கலாசாரத்தோடு சம்பந்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி இன்று, நல்லதொரு கலாசாரத்தின் நறுமணத்தை உலகெங்கும் பரப்புவதற்குரிய சாதனமாகத் தமிழை உயர்த்த வேண்டும். இதுவே நமது குறிக்கோளென்று நான் நினைக்கிறேன்” என்று சிறப்புரை நிகழ்த்தினார் திரு.ஆதி சேஷய்யா.

அடுத்துத் தமிழ்நாட்டு முதலமைச்சர், மாண்புமிகு கலைஞர் கருணுநிதி சிறப்புரையாற்றினார். முந்திய உரையில், தமிழின் மழலை இனிமையை உணர்ந்தோம். கலைஞரின் சிறப்புரையில் தமிழின் பெருமிதத்தை உணர்ந்தோம். வழக்கம்போல் அவரது பேச்சு சிறப் பாகவும் கருத்துடையதாகவும் அமைந்தது.

கலைஞர் தமக்கே உரிய வெண்கலக் குரலில் கணீ ரெனத் தமிழிலேயே பேசினர். எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்தது.

“கண் மருத்துவம் பார்த்துக்கொள்ள வந்த இடத்தில், அதையும் தள்ளிவைத்துவிட்டு, தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்குக் காரணம், தமிழனுக்கு கண்ணிலும் இனியது தமிழ் மொழி” என்று உணர்ச்சியோடு கூறியதை, தமிழ் நாட்டிலுள்ள கோடிக் கணக்கானவர்கள் கேட்டிருக்க வேண்டும்.

அவரது உரை, தமிழ்ப் பற்றினை ஊட்டுவதாக மட்டும் நின்று விடவில்லை.

“தமிழின் வளர்ச்சியில் பிரான்ஸ் கொண்டுள்ள ஆழ்ந்த நாட்டம் தமிழ்-பிரஞ்சு அகராதி ஒன்றை வெளியிட்டதன் மூலம் காட்டப்பட்டது” என்று நினைவு படுத்தி புதிய நட்புறவை வளர்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/71&oldid=481132" இலிருந்து மீள்விக்கப்பட்டது