பக்கம்:உலகத்தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரிசில் தமிழ் முழக்கம்

73


“தமிழ் பரவியுள்ளது. தமிழர்கள் உலகெங்கும் சென்றுள்ளார்கள். ஆனால் தமிழ் மொழி, மொரிசியஸ் போன்ற நாடுகளில் மறைந்து வருகிறது. இன்னும் வேறு சில நாடுகளில் உள்ள தமிழர்களும் தம் தாய் மொழியை மறந்துவிடக்கூடிய அபாயத்திலுள்ளனர்” என்று சுட்டிக் காட்டி, நம்மை எச்சரித்தார்.

“இந்த நிலைமை தொடர்ந்து நிலவ அனுமதிக்கக் கூடாது” என்று அவர் கூறியபோது அனைவரும் ஒப்பினர். என்ன செய்ய வேண்டும்? கலைஞர் கூறக் கேட்போம்.

“தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளிலெல்லாம் தமிழைக் கற்பதற்கான வாய்ப்பும், தமிழனோடு தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பும் வகையும் செய்யப்பட வேண்டும்.” என்று அவர் கூறிய ஆலோசனையை உளத்தால் ஏற்றுக் கொண்டோம். பணத்தைப் பற்றி எண்ணாமல், மொழிக்காகத் தொண்டாற்றிய மணி, திருநாவுக்கரசுகளும், சிவமுத்துகளும், அருணகிரிநாதர்களும், நூற்றுக் கணக்கில், இளந்தலைமுறையில் கிடைத்தால். கடல் கடந்த நாடுகளிலும் தமிழைக் காக்கலாம் என்னும் எண்ணம் என்னுள் எழுந்தது.

பிற நாட்டுத் தமிழரிடையே தமிழ் தழைத்து நிற்பதற்கான வழியைக் கூறிவிட்டு, நம் நாட்டில் செய்ய வேண்டியதை எடுத்துரைத்தார்.

வரலாற்றுக் காலலந்தொட்டு ஆழ்ந்த புலமை பெற்ற மொழியாகும் தமிழ். அது ஒரு செழுமையான மொழி.

“ஆனால் அந்த முதுமையும் தற்போதைய வளர்ச்சியும் மட்டுமே போதாது. நாம் பழைய மகிமையில் ஒய்ந்திருக்கக் கூடாது.

உ. த.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/72&oldid=481162" இலிருந்து மீள்விக்கப்பட்டது