பக்கம்:உலகத்தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரிசில் தமிழ் முழக்கம்

75

கண்ட யானையே. இந்நிலையும் நீடிக்கக் கூடாதல்லவா?

எனவே கலைஞர், ஆராய்ச்சியாளர்களை நெறிப்படுத்தினார். இதோ அவ்வுரை:

“அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களைப் போன்றவர்கள் இங்கே கூடியுள்ள தமிழ் அறிஞர்கள். அவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் முழு உடல் நலத்தையும் தர முயல்கிறார்கள்.

“இப்படிப்பட்ட கடுமையான அறுவை சிகிச்சைகளுக்கு எல்லாம் குழந்தை இரையாகலாமா என்று எண்ணி, அந்த சிகிச்சையைத் தடுக்கக்கூடாது தாய்.

“அதே நேரத்தில், அறுவைச் சிகிச்சைக்காரர்களும் கண்டபடி தம் கத்தியை ஒட்டக் கூடாது.”

இது நமது மொழி ஆராய்ச்சியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரை. தம் விருப்பத்திற்கேற்ப எதையோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு, வலிந்து விளக்கவும் வாதிடவும் கூடாதல்லவா?

மாநாட்டின் முதல் நாள், முற்பகல் நிகழ்ச்சி பெரியவர்களின் ஊக்க உரைகளோடு முடிவடைந்தது. அலுவல் நிகழ்ச்சிகளும் கருத்துப் பரிமாற்றங்களும் பிற்பகலில் தொடக்கம்.

பகல் உணவிற்கு இடந்தேடினோம், தமிழ் மாணவத் தொண்டர்கள் தங்கள் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். விடுதி நெடுந்தொலைவில். ‘யூனெஸ்கோ’விலிருந்து வந்த பேருந்துவண்டி பேருதவியாற்று.

மாணவர் விடுதியைப் பற்றிச் சில சொற்கள். பாரிசு நகரப் பல்கலைக் கழகம், பாரிசாருக்கு மட்டுமன்று; பிரெஞ்சுக்காரருக்கு மட்டுமன்று. அதில் பல நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/74&oldid=481164" இலிருந்து மீள்விக்கப்பட்டது