பக்கம்:உலகத்தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

உலகத் தமிழ்


மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்காக விடுதிகள் பல ஒரே பரந்த வளைவுவுக்குள், பதினைந்து விடுதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டாரால் கட்டப்பட்டது. இந்தியாவும் அங்கு நல்லதொரு விடுதியைக் கட்டியுள்ளது. மேனாட்டு நகரத்தில் இருப்பதால் மேனாட்டுப்பாணியில் இருக்கிறது. விடுதிகளுக்கான அடி மனை பிரஞ்சு நாட்டின் கொடை. விடுதி கட்டும் செலவு அந்தந்த நாட்டைச் சேர்ந்தது. ஒவ்வொரு விடுதிக்கும் அந்தந்த நாட்டின் பெயர் இடப்பட்டுள்ளது. இந்திய மாளிகையில், தமிழ் மாநாட்டுக்கு வந்தோர் சிலர் தங்கியிருந்தனர்.

அங்கே ஒரு விதி, நல்ல விதியும் கூட எந்த விடுதி யிலும் மாணவர் அனைவரும் ஒரே நாட்டினராக இருக்கக் கூடாது. இந்திய மாளிகையில் இந்தியர் பாதிப்பேர். மற்றவர் பல நாடுகளையும் சேர்ந்தவர். இப்படியே கம்போடிய மாளிகையில் கம்போடியாவைச் சோந்தோர் பாதிப்பேர்; இந்தியரும் பிறரும் மற்றப் பாதிப் பேர். ஏன் இந்தக் கலவை? இன்றைய உலகில் தனித்து ஒதுங்கி இருத்தல் நல்லதன்று. விடுதிகளில் பல நாட்டு இளைஞர்களும் கூடி வாழ்தல், அனைத்துலக நல்லெண்ணத்திற்கு ஆடிகோலும். பல நாடுகளிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குத் துணை புரியும். கல்வியாளர்களுடைய கருத்து இது. எனவே பல நாட்டவரும் ஒரே விடுதியில் கூடி வாழவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். நாட்டு வெறியூட்டுவோருக்கிடையே, மானுடத்தை வளர்க்கத் துடிக்கும் நல்லோர் சிலருடைய அவா இது. இந்த அவா வெற்றி பெற்றால் நன்மையே.

விடுதிகள் அத்தனையும், பரந்த பசும்புற்றரை நிறைந்த சோலைகளுக்கிடையே அழகாகக் காட்சியளிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/75&oldid=481165" இலிருந்து மீள்விக்கப்பட்டது