பக்கம்:உலகத்தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்பொருள் ஆராய்ச்சி

77


பல விடுதிகளுக்கும் பொதுவாக உணவு விடுதி. அது பொது மக்களுக்கான உணவு விடுதியன்று. மாண வர்களுக்கும் அவர்கள் விருந்தினருக்குமான விடுதி. மாணவத் தோழர்கள் எங்களுக்காக விருந்தினர் சீட்டு வாங்கிக் கொடுத்தார்கள்.

இவ்வுணவுச்சாலையில் பரிமாறும் முறை கிடையாது. தமக்குத் தாமே பரிமாறிக் கொள்ளவேண்டும் ஒவ்வொரு வரும் தட்டையேந்தி, வரிசையில் நின்று நகர்ந்து, சமைத்து வைத்துள்ள பண்டங்களில் பிடித்தமான வற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் எல்லோரும் தட்டேந்தி நின்றோம். வரிசையில் நகர்ந்தோம். ‘இன்று உணவுப் பண்டங்கள் அவ்வளவு நன்றாக அமையவில்லையே’ என்று அங்கலாய்த்தார்கள் மாணவ நண்பர்கள். காய்கறியே உண்ணும் உங்களைப் போன்றவர்களுக்கு இவை போதாவே என்று இரங்கினார்கள். அருமையான பால் கிடைத்தது. பகல் உணவோடு. ஒருவழியாகச் சமாளித்தோம்.

சிறிது அரட்டைக்குப் பிறகு பிற்பகல் கூட்டத்திற்குப் புறப்பட்டோம். நேரத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.


12 தொல்பொருள் ஆராய்ச்சி

பிற்பகல் நிகழ்ச்சியில் இரு தலைப்புகள் பற்றிக் கட்டுரை கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். சிந்து வெளி எழுத்துக்கள் என்பது ஒரு தலைப்பு, தொல் பொருள்-அகழ் ஆராய்ச்சி என்பது மற்றொரு தலைப்பு இரண்டிற்குமாகக் கிடைத்த நேரம் இரண்டு மணிகளே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/76&oldid=481167" இலிருந்து மீள்விக்கப்பட்டது