பக்கம்:உலகத்தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்பொருள் ஆராய்ச்சி

79

அவர் சில முடிவுகளுக்கு வந்துள்ளார். அவை அண்மையில் நூலாக வெளிவருமாம். அவற்றைப்பற்றிக் கோடிட்டுக் காட்டினர். அவை வருமாறு :

‘இலக்கியம், தொல்பொருள், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் கிடைத்த மொழியில் சான்றுகள் ஆகியவை எங்கள் ஆராய்ச்சிக்கு அடிப்படை.

சமஸ்கிருதம் ‘இந்தோ ஐரோப்பிய’ மொழி. இந்து மதம் ‘இந்தோ ஐரோப்பிய’ மதம் அன்று. இந்து மதத்தின் முதன்மொழி சமஸ்கிருதமன்று. இந்து மதத்தின் வேர் ஆரிய மொழி அல்லாத ஒன்றில் இருக்க வேண்டும். சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் இந்துக்கள். அவர்கள் திராவிடர்கள். இந்து மதம், திராவிட மொழியிலிருந்து சமஸ்கிருத மொழிக்கு மாற்றப்பட்டிருக்கலாம்.

சிந்து வெளி எழுத்துகள் திராவிட எழுத்துக்களே இக் கருத்துக்களைப் பதினைந்து இருபது நிமிடங்களில் பர்போலா கூறினார். நேரக்குறைவால் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் காட்டியதாகவே தோன்றிற்று அவரது விரிவான நூல் வெளியானல், கருத்திற்குப் போதிய தகவல்கள் கிடைக்குமோ என்னவோ?

திரு. பர்போலா பேசியதை மறுத்து, திரு. சுவலபில் பேசினார். இவர் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர். இவர் தமிழ் நாட்டிற்கு வந்து, நம்மோடு சேர்ந்து தமிழ்த் தொண்டு ஆற்றியது பலருக்குத் தெரியும். தமிழ் ஐயாக்களிடம் பாராட்டுதலைப் பெற்றவர். இப்போது அமெரிக்க நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்திலே பணிபுரிகிறார்.

‘புள்ளிவிவர’ முறைப்படி மட்டும் சிந்துவெளி எழுத்துகளை அடையாளம் கண்டுகொள்வது சரியன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/78&oldid=481169" இலிருந்து மீள்விக்கப்பட்டது