பக்கம்:உலகத்தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாரை நம்புவது?

83


சங்க இலக்கியம், இக்கால இலக்கியம், தொல் பொருள் ஆராய்ச்சி, கல்வெட்டுகள், தமிழ்நாட்டின் வெளிநாட்டுத் தொடர்புகள், வெளிநாட்டுத் தமிழர்கள், தமிழும் சமஸ்கிருதமும் ஆகிய தலைப்புகளிலே கட்டுரைகள் அனுப்பும்படி கோரியிருந்தனர்.

கருத்தரங்கோ நான்கு நாள். தொடக்க நிகழ்ச்சி அரை நாள்; நிறைவு நிகழ்ச்சி அரைநாள். பாக்கி மூன்று நாள்களுக்குள் இத்தனை தலைப்புப்பற்றியும் கருந்தரங்கு கள். இந் நிலையில், சிலர் தத்தம் கருத்துகளைக் கூற மட்டுமே முடியும்? அலசிப் பார்க்கவே நேரமில்லை; முடிவெடுக்க நேரமேது? நேரமிருப்பினும் அத்தனை பொருள்பற்றியும் முடிந்த முடிவு கூற முடியுமா?

பெரிய வலையாக வீசி, எல்லோரையும் நிறைவு படுத்துகிற முறையில் தலைப்புகளைப் போட்டிருந்தார்கள் மாநாட்டு அமைப்பாளர்கள். அப்படியும் விட்டோமா?

கம்பனைப் பற்றிய கருத்துரையில்லையே என்று கசிந்து உருகினார் கம்பதாசனொருவர். “அது எங்கள் குறையன்று; கட்டுரை வராதகுறை!” என்ற மாநாட்டவர் உரைக்க, சிலர் அதை அரசின் குறையாகத் திருப்ப முயன்ற முயற்சி, பரிதாபத்திற்குரியதாக இருந்தது. தமிழ்த் தொண்டு புரிய முன்வருவோர், எத்தனை திடீர்ச் சுழல்களைச் சமாளிக்க வேண்டியவர்களாக உள்ளனர் என்பது விளங்கிற்று.

சோவியத் ஆராய்ச்சியாளரின் கருத்தை சுவலபில் மறுத்தபோது;

‘வல்லரசுகள் இரண்டு நம்மை வலுச்சண்டைக்கு இழுத்துவிடுகின்றனவோ?’ என்று அருகிலிருந்த அறிஞர் ஒருவர் என் காதோடு உரைத்தார். முன் வரிசையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/82&oldid=481179" இலிருந்து மீள்விக்கப்பட்டது