பக்கம்:உலகத்தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

உலகத் தமிழ்


சங்கு வளையல்கள் வடிவாகாத பல நிலைகளிலே ஏராளமாய்க் கிடைத்தன. கொற்கையின் தொன்மைக்குக் குறிப்புகள் சில கிடைத்தன. ஆயினும் மேலும் ஆழ்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று எடுத்துரைத்தார். கொற்கையில் கிடைத்த கரிப்பொருள்களை ஆராய்ந்த டாட்டா ஆராய்ச்சி நிலையம் அதன் காலம் கி. மு. 785 ஆம் ஆண்டு என்ற முடிவிற்கு வந்துள்ளது. அதாவது அதன் வயது 2755 ஆண்டுகள். கொற்கை 2755 ஆம் ஆண்டிற்கு முன் சிறந்துவிளங்கிய துறைமுகம். இது தமிழ்ப் பற்றாளர் உரையன்று, விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவு என்று கேட்டபோது ஒரடி உயர்ந்து விட்டோம்.

புதைபொருள் ஆராய்ச்சியாளருக்கு அத் துறை ஈடுபாடு மட்டும் போதாது; அந் நாட்டு மொழி இலக்கியத்தில் தோய்வு தேவை. அதாவது தமிழ் நாட்டில் ஆய்வு நடத்துபவருக்குத் தமிழ் இலக்கிய மூழ்கலும் தேவை எனபதை திரு. நாகசாமி விளக்கினார்.

மாமல்லபுரச் சிற்பங்களும், காஞ்சிக் கைலாசநாதர் கோயில் முதலியனவும் ஆகம முறைப்படி கட்டப் பட்டுள்ளதைக் தொட்டுக் காட்டினர். ஆகமங்களை அறியாதவர் அச் சிற்பங்களையும் கட்டடங்களையும் ஆயும் போது முழு உண்மையையும் உணராது இடர்பபடுவார் என்பதை விளக்கினார்

காவிரிப்பூம்பட்டின ஆராய்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். அங்கே அகழ்ந்து எடுக்கப்பட்ட கப்பல் துறை, நீர்த்தேக்கம், புத்த விகாரம் ஆகியவற்றைக் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதே புத்த விகாரத்தைப் பற்றி, ‘அபிதம்மாவதாரா,’ ‘புத்த வம்சக் கதை’ ஆகிய பிராகிருத நூல்களில் குறித்திருப்பதை எடுத்துக் காட்டினார். பிராகிருத ஆராய்ச்சியாளர், அந்நூல்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/85&oldid=481182" இலிருந்து மீள்விக்கப்பட்டது