பக்கம்:உலகத்தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரடி உயர்ந்தோம்

89


நூல்களே வாங்குவோர், படிப்போர், நூல் வெளியீட்டிற்குத் தூண்டுகோல் . இத்துரண்டுகோல், நம்மிடம் உண்டா? சென்ற காலப் படம் என்ன? நூலை வாங்குதல் தாட்சணியத்திற்காக இதுவே, நம் பட்டறிவு.

முதல் இழந்தாலும் பரவாயில்லை; இத்தலை முறையிலாவது, ஏடுகளை ஆற்றுக்கும் செல்லுக்கும் இரையாக்காமல் அச்சாக்கி அடுக்கி விடலாமென்றால், பரிந்துரை வரும் புற்றீசல் போல். எதற்காக எவ்வெப்போதோ சிறப்பு மலர்களுக்கு எழுதிய சிற்றுரைத் தொகுப்புகளை யெல்லாம் நூலாக்கி வெளியிட.

சும்மா இருப்பதுவே இத்தகைய தொல்லைகளிலிருந்து தப்பும் வழி. எனவே இதுவரை திருக்கம் புலியூர் கண்டுபிடிப்புகள் புதை பொருள்களாகவே நின்று விட்டன. ஆனால் எல்லாக் காலமும் உலகியல் தெரிந்தவர்கள் காலமாக இருக்குமா? இப்போது திருக்காம்புலியூர் ஆராய்ச்சி நூலாக வெளிவருகிறது. இக் கட்டுரை வெளியாகும் போது, அந்நூலும் கிடைக்கும். என்ன அசட்டுத் துணிவு!

எங்கோ இழுத்து வந்து விட்டேனே! வாருங்கள், பாரிசு மாநாட்டிற்கே செல்வோம்.

‘அகல அகல ஆழ்ந்து பார்த்தால், தமிழ் தொன்மையானது; தமிழ்க்குடிகள் மூத்தவர் மட்டுமல்லர்; நாகரிகத்தின் உச்சியை எட்டிப் பிடித்தவர் என்று விளங்குகிறது’ என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஆதி ரோமாபுரி ஆதித்தமிழனோடு தொடர்பு கொண்டிருந்தது, பண்டைக் கிரேக்கம் நம் முன்னோ

உ.த-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/88&oldid=481186" இலிருந்து மீள்விக்கப்பட்டது