பக்கம்:உலகத்தமிழ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாநாட்டு உரைகள்

91

சென்றன, எப்படித் தூது சொல்லின என்பதைச் சுருக்கிக் கூறினார். அகத்துறை பற்றியது அது.அருமையாக இருந்தது என்றார்கள். நெஞ்சோடு கிளத்தலைப் பற்றியும் தூது விடுதலைப் பற்றியும் எனக்குப் பற்று ஏற்படவில்லை. காரணம் வாழ்க்கை கசப்பிலே வளர்ந்து விட்டதால் போலும்.

பிற நாடுகளில் குடியேறிய தமிழர்கள் எப்படி நம் சமயப் பழக்கங்களே எடுத்துச் சென்றார்களோ, அப்படியே நம் சாதிப்பிரிவுகளையும் எடுத்துச் சென்றார்கள். சில நாடுகளில் குடியேறிய நூறு ஆண்டுகளிலேயே அவர்கள் தமிழை மறந்து வருகிறார்கள். இவற்றையெல்லாம் நம்முன் நிறுத்திச சிந்திக்க வைத்தார் பேராசிரியர் தனிநாயகம்.

மாநாட்டுக் கட்டுரைகள் சங்க காலத்தோடும் பிற நாடுகளோடும் நின்றுவிடவில்லை. இக் கால இலக்கியம் பற்றியும் சிலர் படித்தார்கள்.

புதுச்சேரியின் முதல் அமைச்சராக உள்ள மாண்பு மிகு பருக் மரைக்காயர் அவர்கள், ‘புதுவையில் தமிழ் வளர்ச்சி’ என்பது பற்றிக் கட்டுரை படித்தார்.

பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த புலவர் பெருமக்களின் தரத்திற்கு எவ்வகையிலும் குறைவு காண முடியாத அளவிற்குத் திறஞ்சான்ற மொழிப் புலமையால் தமிழைப் புதுவை வளர்த்து வந்ததைச் சுட்டிக் காட்டினார். அத்தகைய தமிழ்ப் புலவர்களின் பட்டியலைத் தந்தார்.

வீரமாமுனிவரின் படைப்புகளாகிய தமிழ் இலக்கியங்களும், சதுரகராதி போன்ற நூல்களும் புதுவையில் தான் அச்சேறி வெளிவந்தன என்பதைக் கூறிப் பெருமிதங்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/90&oldid=481241" இலிருந்து மீள்விக்கப்பட்டது