பக்கம்:உலகத்தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாநாட்டு உரைகள்

93


‘வளரும் தமிழகத்தில் பாவேந்தரின் அடிச்சுவடு பற்றி மறுமலர்ச்சித் தமிழகம் விளக்கமுறும் என்பதில் ஐயமில்லை.’

இவ்வாறு கட்டுரைத்தார் மாண்புமிகு மரைக் காயர்.

பேராசிரியர் ஆஷர் இக்கால இலக்கியத்தை மதிப்பிட்டார்.

இக்கால இலக்கியத்தில் பாடல்களைக் குறிப்பிட்டார். ‘இராமலிங்க அடிகளார், பாரதியார், பாரதிதாசன், கவி மணி ஆகியோரது பாடல்களுக்குச் சிறப்பிடம் உண்டு. அதைக் காண முயல வேண்டும்’ என்று கூறினார், நாமக்கல் கவிஞர், பெரியசாமித் தூரன், புலவர் குழந்தை, அழ. வள்ளியப்பா ஆகியோர் என் கண்முன் தோன்றினர். மற்றவர்கள் முன்னே நிற்காதது என் குறை..

இக்கால இலக்கியம் பெரிதும் உரைநடை என்று குறிப்பிட்டார் ஆஷர். தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றிக் கருத்தாக ஆய்வதற்கு இடமுண்டு என்றார். நாளிதழ்களும் பிற இதழ்களும் பேச்சு நடைப்பக்கம் போவதை நினைவுபடுத்தினார். இதற்கு நேர்ர்மாறாக, நூலாசிரியருள் சிலர் கடுநடையைப் பின்பற்றுகிறார்கள் என்பது ஆஷர் கருத்து. நடைகளிலே இருவேறு போக்கு உள்ளன. பொருளிலும் பல ஓட்டங்கள் உள்ளன.

எங்குமே, இன்றைய இலக்கியத்தில் புதினம் நல்ல இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மொழியில் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் புதினத்தின் தொடக்கம். ராஜம் அய்யரின், கமலாம்பாள் சரித்திரமும், மாதவையரின் நூல்களும் அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/92&oldid=481243" இலிருந்து மீள்விக்கப்பட்டது