பக்கம்:உலகத்தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 கல்வி பற்றிக் கவிபாரதி

மிழ் அறிஞர் முன்னே நானும் ஒர் கட்டுரை படைத்தேன். சிறிய கட்டுரையே. ’கல்வி பற்றிக் கவி பாரதி’ என்பது தலைப்பு.

மொழியும் கல்வியும் ஏறக்குறைய ஒரே தன்மையன. கல்வி, தனி மனித வளர்ச்சிக்கு வழி; தனி மனிதனைச் சமுதாயத்தோடு இணைக்கும் இணைப்பு. எல்லாக் காலப் பெரியவர்களும் கல்வியின் தேவையை, சிறப்பை எடுத்துக் காட்டினர்கள்.

ஆல்பர்ட் சுவைட்சர் என்ற உலகப் பெருந் தொண்டர், பேரறிவாளர், ‘மானுடத்தின் நறுமலர் திருக்குறள், உலகத்தின் தலைசிறந்த நீதிநூல்’ என்றார், அந்நூல் கூறுகிறது. ‘யாதானும நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்தணையும் கல்லாதவாறு’ என்று. கிரேக்கஞானி அரிஸ்டாட்டிலும் இப்படியே கூறுகிறார்.

பேரரசுகளின் தலையெழுத்து இளைஞர் கல்வியிலே இருக்கிறது. ஆளும் கலையைப் பற்றி ஆய்ந்தவர்கள் அனைவரும் இம் முடிவிற்கே வந்தனர்.

ஆளும் கலையைப் பற்றி, மன்னர் மன்னன் நெப்போலியனுக்கு மேல் யாரே சிந்தித்தார்? நெப்போலியன் சொன்னார்:

‘ஆட்சியின் முதல் நோக்கம் ‘பொதுக்கல்வி’யாக இருக்கவேண்டும்’ என்று.

கல்வியின் பெருக்கத்தோடு, தரமும் தேவை. இதையே பிரஞ்சு அறிஞர் மாண்டேயன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/94&oldid=481245" இலிருந்து மீள்விக்கப்பட்டது