பக்கம்:உலகத்தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

உலகத் தமிழ்


இம்மாநாட்டில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, பாரிசு மாணவர் தமிழ் மன்றத் தொடக்கம். இது மாநாட்டிற்கு அப்பாற்பட்டது. தமிழ் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் தவித்த எங்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இம் மன்றத்தைக் கூட்டுவித்த திரு. ஜமாலுதீன், தமிழ் மாணவர் மன்றம் அன்று இது. மாணவர் தமிழ் மன்ற மாதலின் எல்லா நாட்டு மாணவர்களும் தமிழோடு தொடர்புகொண்டு அம் மொழியில் ஈடுபட இது கருவி யாக இருக்கும். பல்வேறு துறையில் மாணவர்களாக உள்ளவர்கள், தமிழைப் பயிலவும் ஆராயவும் இந்த மன்றம் வழிவகுக்கும்’ என்று கூறி விளக்கினர். திரு ஜமாலுதீன் பாரிசில் படிக்கும் தமிழ் மாணவர்; எங்களுக்கெல்லாம் பெருந்துணையாக இருந்தவர்.

மாணவர் தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு, புதுவை முதல் அமைச்சர் மாண்புமிகு திரு, பருக் மரைக் காயர் தலைமை தாங்கினார். தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, தமிழைப் பரப்ப வேண்டுமென்ற நிலைக்கு வந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார். தமிழ் மன்றம் அத்தொண்டைச் செய்து, ஓங்கும்படி வாழ்த்தினார்.

மன்றத்தைத் திரு மதியழகன் தொடங்கி வைத்தார். இம் மன்றத்தை வாழ்த்துவதற்குத் தமிழுலகமே வந்திருக்கிறது என்று நினைவு படுத்தி, இதைத் தொடங்கும் மாணவர்கள் நற்பேறு பெற்றவர்கள் என்றார். தமிழின் பெருமையையும் அது எங்கும் பரவி வரும் இயல்பையுங் கண்டு பெருமிதம் அடைந்தார். இயற்கைதானே!

அம் மன்றத் தொடக்க விழாவில் அமெரிக்கப் பேரறிஞர் திரு பிராங்க்ளின், சுவிட்சர்லாந்து, தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/99&oldid=481250" இலிருந்து மீள்விக்கப்பட்டது