பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள்

ஒன்றே குலமும், ஒருவனே தேவனும். —திருமூலர் அல்லாவைத் தவிர வேறு ஆண்டவனில்லை. —குர்ஆன்

தேவனே நமக்குச் சரணாலயம், நமக்கு வலிமை.

—பழைய ஏற்பாடு

தேவன் நம் பக்கம் இருந்தால், எவர் நமக்கு எதிராக இருக்கக் கூடியவர்?

—புதிய ஏற்பாடு

ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்.

— பழைய ஏற்பாடு

இறைவனோடு கலத்தல் என்பது மற்றெல்லாவற்றிலிருந்தும் பிரிதல்; மற்றவைகளிலிருந்து பிரிதல் என்பது இறைவனோடு கலத்தல்.

—ஸுஃபி

நான் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அதிலுள்ள இறைவனைக் காணாமல் இருந்ததில்லை. —ஸுஃபி மரத்தடியில் ஆளில்லாத போதுதான், ஆண்டவன் தேங்காயை விழச் செய்கிறான். —அரேபியா ஒளி ஒளியிலிருந்து வருகிறது; இரண்டு ஒளிகளும் ஆண்டவனிடம் மிருந்து வருகின்றன. —அரேபியா நீ கர்த்தரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா?

— பழைய ஏற்பாடு

ஆண்டவருக்குப் பயந்து, அவர் கட்டளைகளை நிறைவேற்று.

—பழைய ஏற்பாடு

ஆண்டவர் அன்பானவர்; அன்பில் வசிப்பவன் ஆண்டவரில் வசிக்கிறான்; ஆண்டவரும் அவனில் வசிக்கிறார்.

— புதிய ஏற்பாடு

ஆண்டவரே நமது அடைக்கலமும், வல்லமையும்.

— பழைய ஏற்பாடு

உ. ப.—1