பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முது ைம வீடு, போ, போ' என்கிறது. "காடு வா, வா’ என்கிறது. -தமிழ்நாடு வயது முதிர்ந்த மனிதன் எலும்புகள் நிறைந்த மெத்தை போன்றவன். -இங்கி லாந்து வயது ஆக ஆக அறிவும் பெருகும், மடமையும் பெருகும். -இங்கிலாந்து ஆலோசனைக்கு முதியோர், போருக்கு இளைஞர். -இங்கிலாந்து முதுமையில் யோசிக்கவேண்டும், இளமையில் செயல் புரிய வேண்டும். -இங்கிலாந்து காதலைப்போல, வயதையும் மறைக்க முடியாது. -இங்கிலாந்து மனிதனையும் விலங்கையும் அடக்கி விடுபவை வயதும், விவாகமும். -இங்கிலாந்து வயது கூடக் கூட, கல்லறை நெருங்கி வருகிறது. -இங்கிலாந்து முதுமையில் இளமையை விரும்புவோர் இளமையில் முதியவரா யிருக்க வேண்டும். -இங்கிலாந்து முதுமையே ஒரு நோய். -இங்கிலாந்து வயோதிகம் நோய்கள் சேரும் துறைமுகம். -இங்கிலாந்து மரணத்தைவிட அஞ்சத்தக்கது முதுமை. -இங்கிலாந்து முதுமை உள்ளே வந்தால், புத்தி வெளியே போய்விடும். -ஷேக்ஸ்பியர் ஆகக் கூடிய வயதுடையவனும் இறந்துதான் போனன். -அயர்லந்து வழித்துணைக்கு முதுமை ஏற்றதன்று. -டென்மார்க் இதயம் எவ்வளவு முதுமையோ, அவ்வளவே ஒருவனுடைய முதுமை. - -ஃபிரான்ஸ் பெண்டிர்க்கு நரகம் முதுமை. * . -ஃபிரான்ஸ் முதுமையால், முகத்தைக் காட்டிலும், மனத்திலே அதிகச் * சுருக்கங்கள் விழும். -மான்டெயின்