பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள். -இங்கிலாந்து தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித் தெழுவான் -இங்கிலாந்து நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம். -இங்கிலாந்து முன்னிரவில் துரங்கி, அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும். -இங்கிலாந்து வைத்தியர்களைவிட உணவுமுறை அதிகக் குணமுண்டாக்கும்" -இங்கிலாந்து நீண்ட நாள் வாழ்வதற்குக் கதகதப்பான உடையணியவும், மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும். —(?” ) மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட. -இங்கிலாந்து குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை. -இங்கிலாந்து ஆரோக்கியமுள்ள உடல் ஆன்ம்ாவுக்கு விருந்து மண்டபம்: நோயுள்ள உடல் அதன் சிறைக்கூடம். -பேக்கன் G пь т іш கோழிக்கு ஊசிப்புண் போதும். -இந்தியா எப்பொழுதும் நோயுள்ளவனுக்குப் பெயர் ஆரோக்கியதாழி. -இந்தியா முதல் சாமத்தில் எல்லோரும் விழித்திருப்பர்; இரண்டாவதில் போகி விழித்திருப்பான்; மூன்ருவதில் திருடன் விழித் திருப்பான்; நான்காவதில் நோயாளி விழித்திருப்பான். -இந்தியா நோய் வந்து விட்டால் எந்த வைத்தியரையாவது அழை. இ