பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மரம் நட்டவன் தண்ணீர் விடுவான். - தமிழ் நாடு அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான். - தமிழ் நாடு குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில். -( " ) அல்லா சொத்து எல்லாருக்கும். - தமிழ் நாடு மனிதர்கள், பெண்களின் முகங்களில் நான் இறைவனைக் காண்கிறேன். - தமிழ் நாடு இருத்தல் என்பது இறைவனுடன் வாழ்தல். - எமர்ஸன் கடவுள் இருக்காவிட்டால், அவரை (நாம்) உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். - வால்டேர் பல்லைக் கொடுத்த பகவான் ரொட்டியும் கொடுப்பான். - இந்தியா கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் உணவளிக்கிறார்; ஆனால் அதைக் கூட்டில் கொண்டுபோய் வைப்பதில்லை. -( " ) உன்னை நனைத்த கடவுளே மறுபடி உன்னைக் காயவும் வைப்பார். - இந்தியா ஆண்டவன் நம் பக்கம் இருந்தால், வெற்றி முன்னதாகவே வந்துவிட்டதாகக் கொள்ளலாம். - இந்தியா கடவுள் பூரணத்தையும் நிரப்புகிறார். - இந்தியா சத்தானானது ஒன்றுதான். முனிவர்கள் அதைப் பல பெயர்களால் அழைப்பர். - இந்தியா மனிதர்களிடம் கொள்ளும் அன்பே கடவுளிடம் அன்பு கொள்ள வழி காட்டுகின்றது. - இந்தியா அன்னையும் பிதாவும் அன்பாயுள்ளனர் : ஆனால் ஆண்டவன் அவர்களிலும் அன்பாயிருக்கிறான். - டென்மார்க் கடவுள் வாரச் சம்பளம் கொடுப்பதில்லை; ஆனால் அவர் முடிவில் கொடுக்கிறார். - ஹாலந்து