பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத் தி யம் காலம்தான் தலை சிறந்த வைத்தியர். -யூதர் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன். -தமிழ்நாடு வைத்தியரின் மரங்களுக்கு நம் கண்ணிர்தான் தண்ணீர். -இந்தியா வைத்தியருக்கு மூக்கிலே படர்தாமரை. -இந்தியா அரைகுறை வைத்தியல்ை உயிருக்கு ஆபத்து, அரைகுறை முல்லாவால் சமயத்திற்கே ஆபத்து. (முல்லா-முஸ்லிம் களின் குரு) -இந்தியா நீதிபதி, வைத்தியர் இருவரிடமிருந்தும் இறைவன் என்னைக் காப்பாகை. -துருக்கி உடலைக் குணப்படுத்தலாம், மனதைக் குணப்படுத்த முடியாது. வைத்தியர் தூரத்திலிருந்து கொண்டே மருந்து அனுப்புதல், குருட்டுக் கண்ணுல் பார்ப்பது போலாகும். -யூதர் இலவச வைத்தியம்-பயனற்ற மருந்தாயிருக்கும். -யூதர் நோயைச் சொன்னல்தான், குணமாக மருந்து கிடைக்கும். -ஃபிரான்ஸ் வைத்தியர் வந்தாலே, நோய் குணமாகத் தொடங்கிவிடும். - -ஃபிரான்ஸ் வைத்தியர்கள் மட்டும் பொய் சொல்ல அனுமதியுண்டு. -ஃபிரான்ஸ் மெத்தப் படித்த வைத்தியரைவிட, ஆக்கமுள்ள வைத்தியர் மேல். -ஜெர்மனி வைத்தியர் இளமையா யிருந்தால், எப்பொழுதும்- மூன்று சவக்குழிகள் தயாரா யிருக்கவேண்டும். -ஜெர்மனி