பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 வைத்தியனுக்கு மூன்று விஷ பங்கள் தேவை: சிங்கத்தின் இதயம், பெண்ணின் கரம், கழுகின் பார்வை. -ஜெர்மனி நோயைக் கொன்று லும், ஆளைக் கொன்றலும், வைத் தி பருக்கு "ஃபீஸ் உண்டு, -போலந்து பிச்சைக்காரர்களுக்குள் அவ்வளவு துவேஷம் கிடையாது: வைத்தியர்களுக்குள்ளே அதிக வெறுப்பு உண்டு -( ' ) தனக்குத் தானே வைத்தியம் செய்துகொள்பவனுடைய நோயாளி மூடன். -இங்கிலாந்து பல வைத்தியர்கள் பார்த்தால், மரணம் நிச்சயம்தான். -ஸெக் தண்டனை யடையாமல் கொல்லக்கூடியவர் வைத் தியர் ஒருவரே. o -ஹங்கேரி எல்லோரும் ஆரோக்கியமா யிருந்தால், வைத்தியர் பாடு திண்டாட்டம். ஹங்கேரி கடுமையான நோய்க்குக் கடவுளே வைத்தியர். -ஹங்கேரி ஒரு தொழிலும் தெரியாதவன் வைத்தியன கிருன். -இத்தாலி வைத்தியர்கள் அதிகமானல், நோய்கள் பெருகும். -போர்ச்சுகல் வைத்தியர்களும் நீதிபதிகளும் பயமில்லாமல் கொலை செய் கிருர்கள். -ரவியா ஒவ்வொரு பி னி க் கு ம் வைத்தியரை நாடவேண்டாம்; ஒவ்வொரு வழக்குக்கும் வக்கீலை நாடவேண்டாம். -ஸ்பெயின் மரணம்தான் கடைசி வைத்தியர். -ஸ்பெயின் நீ வைத்தியரை வெறுத்தால், பிணியையும் வெறுக்கவேண்டும். -ஆப்பிரிக்கா அநுபவமில்லாதவன் வைத்தியரைக் குணப்படுத்திவிடுவான்' -ஆப்பிரிக்கா நீயோ வைத்தியரை ஏமாற்றிவிட்டாய்: அடுத்த நோய்க் குச் சொந்த வைத்தியம் செய்துகொள். -ஆப்பிரிக்கா வைத்தியர்களில் வயதானவர், வக்கீல்களில் வாலிபர்' -இங்கிலாந்து