பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 பிறப்பைத் தப்ப முடியாதவன் இறப்பையும் தப்ப முடியாது. -பின்லந்து உலகத்தைவிட்டு வெளியேறுவதற்குப் பல வழிகள் இருக் கின்றன; ஆனால் இங்கு வருவதற்கு ஒரே வழிதான் உண்டு. -போர்ச்சுகல் மரணத்திற்கு விலை உண்டு; வாழ்வைக் கொடுத்து மரணத்தை வாங்க வேண்டியிருக்கிறது. -ரஷ்யா மரணம் வீட்டுக்கு வந்துவிட்டால், மரண அவ ஸ்தை தீர்ந்தது -ரஷ்யா கண்ணிர் உயிரைப் பிடித்து வைக்க முடியாது. -ஆப்பிரிக்கா செத்தவற்றிலும் உயிருள்ளவை இருக்கும், உயிருள்ளவை களிலும் இறந்தவை இருக்கும். -ஆப்பிரிக்கய மரணம் வீட்டின் உடமைக்காரன், அந்நியனல்லன். ー( ") தொடர்ந்து கடுங்கிக் கொண்டிருப்பதைவிட, ஒரேயடியாக மரித்தல் மேலானது. -கிரீஸ் மனிதர் நியாயமற்ற முறையில் மரணத்தை வெறுக்கின்றனர்; அவர்களுடைய பல துயரங்களுக்கும் அதுவே காப்பாயிருக் கின்றது. -கிரீஸ் மரணத்தில் பயங்கரம் ஒன்றுமில்லை; கேவலமான மரணமே அத்தகையது. -கிரீஸ் நல்ல மரணம் வாழ்வு முழுவதும் பெருமை யளிப்பது. -இத்தாலி உழைப்பு, கவலைகளிலிருந்து ஒய்வு பெறுவது மரணம். -லத்தீன் மரணம் எல்லாப் பொருள்களையும் சமமாக்குகின்றது -( ' ) மரணம் உனக்காக எங்கே காத்திருக்கும் என்பது நிச்சயமில்லை; ஆதலால் அதை எங்குமே எதிர்பார்க்க வேண்டும். -லத்தீன் போய்விட்டான் என்று நீங்கள் சொல்பவன் (நமக்கு) முன்னுல் போய் நிற்கிருன். -லத்தின் உ. A.-ே