பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 உன் கடைசி நாளை எண்ணி அஞ்சவும் வேண்டாம், அதை விரும்பவும் வேண்டாம். -லத்தீன் இறந்தோரைப் பற்றிப் பெருமையாக மட்டும் பேசு. -லத்தீன் மரணத்திற்கு மருந்தில்லை. -லத்தீன் மரணம் வயது முதிர்ந்ததைக் கொண்டு போவதில்லை: பழுத்ததையே கொண்டு போகின்றது. -ரவியா மரணம் குட்டிகளையும், ஆடுகளை யும் சேர்த்து விழுங்கு கின்றது -ஸ்பெயின் மரணம் உண்மையைப் புலப்படுத்துகின்றது. -யூதர் கல்லறை புதைப்பதற்கு எந்த நிலமும் நல்லதுதான். -ஜப்பான் வாழ்க்கையில் முதன்மையான விஷயம் நல்ல முறையில் அடக்கம் செய்யப்படுதல். -சீன இடுகாடுதான் குடிக்கூலி குறைவான விடுதி. -நீகிரோ பூமிதான் தக்க புகலிடம். -இங்கிலாந்து கல்லறையுள் அரசன் யார்? ஆண்டி யார்? -இங்கிலாந்து தங்க முலாம் பூசிய கல்லறைகளினுள்ளும் புழுக்களே உள்ளன. -ஷேக்ஸ்பியர் நம்முடைய வாழ்வு சமாதியை நோக்கிச் செல்லும் யாத் திரையாகத்தான் இருக்கிறது. -இங்கிலாந்து பொதுவாக எல்லோரும் சந்திக்குமிடம் சமாதிதான். -( ) வயது கூடக்கூட. நாம் கல்லறையை நெருங்கிக் கொண்டே யிருக்கிருேம். -இங்கிலாந்து கல்லறையிலேதான் ஒய்வுண்டு. -யூதர் நாம் வாங்குகிற ஒவ்வொரு மூச்சும் நம் சமாதியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியாகும். -அரேபியா