பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்மையும் தீமையும் ஒவ்வொரு நன்மையிலும் ஒரு தீமையும் உண்டு. -லத்தீன் நல்லது நத்தை வேகத்தில் பரவும்; தீயது சிறகடித்துப் பறக்கும். -இந்தியா நன்மைகள் ஜோடி ஜோடியாக வருவதில்லை, சோகங்கள் தனித்தும் வருவதில்லை. -சீன விளக்கை ஏற்றுவதைவிட அணைப்பது எளிது. -ஜெர்மனி வாரந்தோறும் ஞாயிறு உண்டு, அத்துடன் வெள்ளியும் உண்டு. (ஞாயிறு ஒய்வு நாள், வெள்ளி உபவாச நாள்.)-போலந்து நன்மை செய்வதில் நோக்கத்தைவிடச் செயல்தான் முக்கியம்: தீமையில் செயலைவிட நோக்கமே முக்கியம். -ஸ்பெயின் நல்லது செழிப்பா யிராது. -ஸ்பெயின் நல்லதை உள்ளே வைத்தால், நல்லதை வெளியே எடுக்கலாம், உலகத்திலுள்ள எல்லாத் தலைகளையும்விட, ஒரு நல்ல இதயம் மேலானது. -இங்கிலாந்து உறுதியா யில்லாவிட்டால், நீ நல்லவனயிருக்க முடியாது. -இங்கிலாந்து தீமைக்கு உதவி செய்பவன் நன்மைக்குக் கேடு செய்கிருன். -கிரீஸ் நல்லவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு தெய்வம் தங்கியிருக் கின்றது. -லத்தீன் அதிருஷ்டமுள்ளவன் என்பதைக் காட்டிலும், நல்லவன் என்று பெயரெடு. -லத்தீன் நன்மை செய்வதில் நாம் சலிப்படையாமல் இருப்போமாக. -புதிய ஏற்பாடு நீ நல்லவனயிருந்தால், தனிமையாயிருப்பாய். -மார்க் ட்வெயின் தீமை வெளியே போயிருந்தால்தான், நன்மை விட்டுக்குள் வர முடியும். -ஸெக்