பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஒரு நகரத்தில் எல்லோரும் ஒரு கன்றைக் கும்பிடுவதைக் கண்டால், நீயும் அதற்குப் புல்லறுத்துப் போடு. -எகிப்து உலக நாடுகளும் மக்களும் சீனவிலே படிப்பவர்களைக் காட்டிலும் ஆசிரியர்கள் அதிகம்: நோயாளரைக் காட்டிலும் வைத்தியர்கள் அதிகம். -சீன ஆங்கிலேயர் (அரபு) சுல்தானுக்கு அம்மான்மார்கள். -அரேபியா அரபு ஒரு மொழி, பாரசீக மொழி ஒரு மிட்டாய், துருக்கி மொழி ஒரு கலை. -பாரசீகம் அரபு மொழி மனிதரைப் புகழ்ந்து பேச நல்லது: துருக்கி அவர்களைக் கண்டிக்க நல்லது, பாரசீகம் அவர்களுக்கு உண்மையை உணர்த்த நல்லது. -பாரசீகம் எதியோபியன் வெள்ளையனைல், ஃபிரெஞ்சுக்காரர்_ ஆங்கி லேயரை நேசிப்பார்கள். -இங்கிலாந்து ஸ்காச்சுக்காரன் தன் இனத்தைக் காணும்வரை சண்டைக்குக் கிளம்பமாட்டான். -இங்கிலாந்து மாட்டின் கொம்புகள், குதிரையின் குளம்புகள், ஆங்கிலேய னின் புன்னகை இவைகளில் உஷாரா யிருக்கவேண்டும். -அபாலநது மன்ஸ்டர்காரன் உருளைக் கிழங்கு என்று வாயால் சொல்வதற். குள்ளே, அல்ஸ்டர்காரன் உருளைக்கிழங்கை மண்ணி லிருந்து தோண்டியெடுத்து, கழுவி, வேகவைத்து, உண்டு விடுவான். -அபாலாநது நல்லவரோ, கெட்டவரோ-எல்லோரும் பல்கேரியர். -பல்கேரியா "கடவுள் பூமியைப் படைத்தார்; ஆனல் டச்சுக்காரர்களே ஹாலந்தைப் படைத்தனர். -பல்கேரியா கிரேக்கன் வெறும் கிழ்வன யிருந்ததில்லை, -கிரீஸ்