பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

‘பிஸ்மில்லா' என்று இறைவன் திருநாமத்தால் எதையும் தொடங்கினால், நன்மையே வரும்; ஆனால் இது நரி வேட்டையிலன்று. -ஆப்கானிஸ்தானம் கத்தி தலைக்குமேல் வந்ததும், மனிதனுக்குக் கடவுளின் நினைவு வருகின்றது. -ஆப்கானிஸ்தானம் இறைவனும் ஈச்சம்பழங்களும் சேர்ந்தாற்போல் உனக்குக் கிடைக்க முடியாது. -பாரசீகம் கடவுள் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி கேட்பவர்கள் (சொந்தக் கால்களில் நிற்காமல்) மரக் கால்களுடன் நிற்பவர்கள்.
இறைவன் திருநாமமே செல்வம், அது நம்மை அடுத்துக் காக்கும். -சீக்கியர் தானாகக் கடவுளுக்கு அஞ்சாதவன் கட்டாயத்தினால் மனித சமூகத்திற்கு அஞ்சவேண்டும். -ஸுஃபி கடவுளுக்கு அஞ்சு; அடுத்தபடியாகக் கடவுளுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சு. - போலந்து கடவுள்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு உன் வண்டியைத் தள்ளு. - போலந்து கடவுள் அடிக்கடி நம்மிடம் வருகிறார், ஆனால் பெரும்பாலும் அந்த நேரங்களில் நாம் வீட்டில் இருப்பதில்லை. - ஃபிரான்ஸ் கடவுளின் (அடியார்களாகிய) ஞானிகளை அண்டுவதைப் பார்க்கினும், கடவுளையே அண்டு. -ஃபிரான்ஸ் இறைவனில்லாமல் எதுவுமில்லை. - ஃபிரான்ஸ்

நம் இறைவன் ஒரு வலிய கோட்டை.

-லூதர்

கடவுள் பாலைத்தான் கொடுப்பார், பாத்திரத்தையும் கொடுப்பதில்லை.

- ஜெர்மனி