பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணம் இறைவன் வானத்தை ஆள்கிருன், பணம் உலகத்தை ஆள் கின்றது. -ஜெர்மனி வெறும் கை முழம் போடாது. -தமிழ்நாடு பணம் இருந்தால், இரும்பும் மிதக்கும். -இந்தியா சந்தை பணம் கொடுப்பவனுக்குச் சொந்தம். -இந்தியா பணமில்லாதவன் பாய்களில்லாத கப்பல் போன்றவன். -ஜப்பான் பணம் சேர்த்தல் ஊசியால் குழிதோண்டுவது போன்றது. -ஜப்பான் பணத்தைக் காட்டினல், குருடர்களும் கண்ணைத் திறந்து விடுவர். -சீன உன்னிடம் பணம் இருந்தால், நீ சொல்வதெல்லாம் வேத உண்மை. -சீன பணமிருந்தால் நீ பாம்பு. இல்லாவிட்டால் புழு. -சீன பத்துப் பவுன் இருந்தால், தெய்வங்களே வசமாக்கலாம்; நூறு இருந்தால், சுவர்க்கத்தையே வசமாக்கலாம். -சீன கையில் பணமில்லையானல், ஏலக் கடைகளுக்குச் செல்ல வேண்டாம். -யூதர் பணமுள்ளவனுக்குப் பயம், இல்லாதவனுக்கு வருத்தம்.

  1. -பாரசீகம்

ஏழையின் பணம் சூரியனைக் கண்ட பணிபோல் தீர்ந்து விடுகின் றது. -ஃபிரான்ஸ் பணமில்லாதவன் பற்களில்லாத ஒநாய் போன்றவன். ( " ) பணம் அறிவாளர்களுக்கு அடங்கித் தொண்டு செய்யும்; ஆனல் மூடர்களை ஆட்சி செய்யும். -பிரான்ஸ் பணம் பேசும். -அயர்லாந்து