பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 எல்லாத் தீமைக்கும் வேர் பண ஆசை. -புதிய ஏற்பாடு பணமில்லாதவன் அரிசித் தொட்டிக்குள் வாயைத் தைத்துக் கொண்டு கிடப்பது போலத்தான். -சீன ரொக்கப் பணமிருந்தால், எதையும் வாங்கி அடுக்கலாம். ( ' ) இரண்டு கைப்பிடி உண்மையைக் காட்டிலும் ஒரு பிடி பணம் வல்லமையுள்ளது. -டென்மார்க் பணமில்லாத மனிதன் அம்பில்லாத வில். -இங்கிலாந்து தங்கத் திறவுகோல் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கும். ( ' ) கடவுள்-உனக்கு ஆதிகப் புத்தியைக் கொடுக்கட்டும்; எனக்கு அதிகப் பணத்தைக் கொடுக்கட்டும். —( ' ' ) பை நிறையப் பணமுள்ள வனுக்கு நண்பர்களுக்குப் பஞ்ச மில்லை. -இங்கிலாந்து பணமில்லாதவனுக்குப் பையே தேவையில்லை. - இங்கிலாந்து பணத்திற்காகக் கடவுளுக்கு ஊழியம் செய்பவன், அதிகப் பணம் கிடைத்தால், சயித்தானுக்கு ஊழியம் செய்வ்ான். -இங்கிலாந்து பணம் தேவையானவனுக்கு எல்லாமும் தேவைதான். -( ' ) பணம் பணத்தைக் கொண்டு வரும். -இங்கிலாந்து மனிதனைப் பிடிப்பதற்குச் சிறந்த துாண்டில் பணம்தான். -இங்கிலாந்து பணம் பானையை அடுப்பில் ஏற்றுகின்றது. -இங்கிலாந்து பண ஆசையும் கல்வி ஆசையும் சந்திப்பது அரிது. —( " ) சுதந்தரத்தை விலையாகக் கொடுத்துத்தான் நாம் பணத்தைப் பெற வேண்டும். -இங்கிலாந்து பணம் இருந்தால் பயம், பணம் இல்லாவிட்டால் துக்கம். -இங்கிலாந்து திய வழியில் வந்த செல்வம் செழிப்பதில்லை. -ஃபிரான்ஸ்