பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 ஏழை மனிதன் ஒருபோதும் சுதந்திரமா யிருப்பதில்லை: ஒவ்வொரு நாட்டிலும் அவன் ஊழியமே செய்கிருன். -வால்டேர் வறுமை சோம்பலின் மகள். -ஜெர்மனி ஏழை உண்மையைச் சொன்னலும் நம்பமாட்டார்கள். -கிரீஸ் செல்வர்கள் இறுமாப்பைவிட வறுமையைத் தாங்குதல் மேல். -கிரீஸ் ஏழை மனிதன் தன் ஆடுகளை எண்ணிப் பார்ப்பது இயற்கை. -லத்தீன் வறுமையுள்ள இடத்திற்குப் பணம் மிகவும் நிதானமாகத் தான் வரும். -லத்தீன் வறுமை வெறுக்கத்தகுந்த ஒரு நன்மையாகும். -லத்தீன் வறுமையே குற்றங்களுக்குத் தாய். -லத்தீன் உடல் சரியாயிருக்கிறது, பைதான் நோபீற்றிருக்கின்றது. -லத்தீன் பணப்பையை இழந்தவன் உன் விருப்பப்படி எங்கு வேண்டு மாலுைம் போகத் தயாரா யிருப்பான். -லத்தீன் ஏழையை எங்கும் வெறுக்கின்றனர். -லத்தீன் நாம் வறுமையைப் புகழவில்லை; ஆனல் வறுமைக்கும் வளைந்து கொடுக்காதவனையே புகழ்கிருேம். -லத்தீன் ஏழைகள் பாடுகிரு.ர்கள், செல்வர்கள் கேட்கிருர்கள். -ரஷ்யா ஏழை மனிதனுக்காக நாம் எதையும் செய்வோம்-ஆனல் அவன் முதுகைவிட்டுக் கீழே இறங்கமாட்டோம். - -டால்ஸ்டாப் உலகில் இரண்டு குடும்பங்களே யிருக்கின்றன; உடையவர்கள். இல்லாதவர்கள். -ஸெர்வான்டிஸ் வறுமையும் மடிமையும் சகோதரர்கள், -யூதர்