பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 தானியத்தை விற்பவன் வியாபாரி, தானியத்தைப் பதுக்கிச் சேர்த்து வைப்பவன் மக்களை வதைக்கும் கொலைகாரன். -இந்தியா தீயதைச் சிந்தித்தலும் தீயதே. -அரேபியா பொய்யன், திருடன், துரக்கு-மூவரும் சகோதரர்கள். -ஸெக் கொஞ்சம் திருடியும், கொஞ்சம் பொய் சொல்லியும் வருப வனும் வாழ்க்கை நடத்தி வருகிருன். -எஸ்டோனியா ஒரு சமயம் தீயவன யிருந்தவன் எப்பொழுதும் அப்படியே கருதப்படுகிருன். -இத்தாலி விலக்கப்பட்டவை யெல்லாம் (ஹராமானவை) இனிமை யானவைகளாகவே தோன்றும். -அரேபியா இரு முறை பாவம் செய்தவனுக்குப் பாவம் பாவமாய்த் தோன்ருது. -யூதர் பாவியின் ஒடம் மூழ்கவே செய்யும். -கீழை நாடு நம் கனவுகளிலிருந்தும் பாவங்கள் வரும். -எகிப்து பாவங்களிலிருந்து பாவங்கள் முளைக்கின்றன. -சிக்கியர் ஆதாம் தின்ற ஆப்பிள் பழத்தால் நமக்கு இன்னும் காய்ச்சல் அடிக்கின்றது. o -ஜெர்மனி பாவமும் தண்டனையும் ஒரே சங்கிலியில் கட்டப்பெற்றவை. -ஜெர்மனி பாவம் செய்யாமையே பெரிய தவம். -ஜெர்மனி எந்த மனிதனுக்கும் தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே. -புதிய ஏற்பாடு தீய ஒழுக்கமே துயரத்திற்கு மூலம். -சீன ஒரு தீமையிலிருந்து பல விளைகின்றன. -இங்கிலாந்து இரண்டு தீமைகளில் குறைந்ததை எடுத்துக்கொள். -( ' ) அநித்தியமான மனிதனுக்கு எந்தத் தீமையும் நித்தியமான தன்று. -இங்கிலாந்து இமை நினைப்பவனுக்குத் தீங்கே உண்டாகும். -இங்கிலாந்து