பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஒரு தீமையை விலக்குவதற்கு வேறு ஒரு தீமையைச் செய்தல் நன்மையாகாது. -ஜெர்மனி தீமையைத் தண்டிக்காதவன் அதை வரவேற்பவனகிருன். -ஜெர்மனி தீமையிலிருந்து நன்மை வருமென்று அதை ஒருபோதும் செய்ய வேண்டாம். -இத்தாலி தீய வாழ்க்கையே ஒருவகை மரணமாகும். -ஸ்பெயின் மனிதர்கள் ஒளியைவிட இருளையே விரும்பினர்கள், ஏனெனில் அவர்களுடைய செயல்கள் தீயவைகளாக இருந்தன. -புதிய ஏற்பாடு செய்த பிறகு அழவேண்டிய வினையைச் செய்யாமலிருத்தல் நலம். -இங்கிலாந்து தன் பாவங்களைப் பற்றிப்பெருமையாகப் பேசுபவன், இரண்டு முறை பாவம் செய்கிருன். -ஸெர்பியா திய வினைகளோடு தீய சொற்களும் சேர்ந்தால், தீமை இரு மடங்காகின்றது. -இங்கிலாந்து இயற்கைக்கு மாருனசெயல்கள், இயற்கைக்கு மாருன துயரங் களைப் பெருக்குகின்றன. -ஷேக்ஸ்பியர் செய்த வினையை அழிக்க முடியாது. -இங்கிலாந்து தீமைக்கு வழிகாட்டும் எந்தச் செயலும் செய்பவனுக்கு இன்ப மளிப்பதில்லை. -லத்தின் செயல் மறக்கப்படுகிறது, ஆனல் அதன் பயன்கள் நிலைத்திருக் கின்றன. -லத்தீன் மக்களின் செயல்கள் தெய்வங்களை ஒருபோதும் ஏமாற்றுவ மற்றவனுக்காகக் குழி தோண்டுபவன், குழியின் அளவுக்குத் தன்னையே பார்த்துக் கொள்ளவேண்டும். -எஸ்டோனியா காற்றை விதைத்தால், புயலை அறுக்கலாம். -எஸ்டோனியா கேடு சட்டென்று முடியும்; புண்ணில் நெடுநாள் வலிக்கும். -ஃபின்லந்து