பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழு வாய் குற்றத்தை ஒப்புக்கொள்ளல் பாதி பரிகாரம். -இங்கிலாந்து வெளிப்படையாகக் குற்றத்தை ஏற்றல் ஆன்மாவுக்கு நன்மை. -ஃபின்லந்து குற்றமே செய்யாமல் இருப்பதற்கு அடுத்தபடி, செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளல். -ஃபின்லந்து இரத்தத்தில் கைகளை நனைத்தவன் கண்ணிரால்தான் அவை களைக் கழுவ வேண்டும். -ஜெர்மனி கழி விர க்கம் அம்பு எய்தல் வேகம், அதைவிட வேகம் பழி வாங்கல், எல்லாவற்றிலும் வேகம் செய்ததற்கு வருந்துதல். -பாரசீகம் இ ன் பம் இன்று நாம் செய்யும் நன்மை நாளைய இன்பம். -இந்தியா இன்பமாயிருக்க விரும்புபவன் செவிடயுைம். குருடனயும், ஊமையனயும் இருக்கவேண்டும். -துருக்கி இன்பத்தின் மூன்று இரகசியங்கள் - இவை தீமையைப் பாராதே, தீமையைக் கேளாதே, தீமையைச் செய்யாதே. -சீன அருகிலுள்ளவர்களுக்கு இன்பமளித்தால், தொலைவிலுள்ளவர் களும் தேடி வருவார்கள். -சீன இன்பம் என்பது அன்பின் மகன், ஆனால் தந்தையாகிய அன்பையே கொல்லும் இன்பம் இயற்கையான மகனல்ல. -அரேபியா