பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

குருட்டுப் பறவையின் கூடு கடவுள் கட்டியது. - துருக்கி ஆண்டவர் ஏழைக்கு இன்பமளிக்க விரும்பினால், அவனுடைய கழுதையை முதலில் காணாமல் போக்கி, மறுபடி அகப்படும்படி செய்வார். - துருக்கி ஒவ்வொருவனும் தனக்காக இருக்கிறான்; கடவுள் எல்லோருக்குமாக இருக்கிறார். - யூதர் நோய் வருமுன்பே ஆண்டவன் மருந்தை அனுப்புகிறான். - யூதர் ஆண்டவன் ஒரு கரத்தால் தண்டித்தாலும், மறு கரத்தால் அரவணைத்துக் கொள்கிறான். - யூதர் சவாரி செய்பவன்தான் மனிதன்; கடிவாளத்தைப் பிடித்திருப்பவர் கடவுள். - யூதர் செல்வந்தன் கடவுளைத் தன் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு போகிறான்; ஏழை தன் இதயத்தில் வைத்திருக்கிறான். - யூதர்

இதயமே சிறந்த உபதேசியார்; காலமே சிறந்த ஆசிரியர். உலகமே சிறந்த புத்தகம்; கடவுளே சிறந்த நண்பர்.

- யூதர்

கடவுள் உயரே இருக்கிறார், ஜார் அரசரோ தொலைவில் இருக்கிறார். (ஜார்-ரஷ்யச் சக்கரவர்த்தி) -எஸ்டோனியா

தமக்குத் தாமே உதவிக் கொள்வோருக்கே தெய்வம் துணை செய்யும்.

- இங்கிலாந்து

கண்யமான நீதிபதி மெலிந்த ஊழியர்களைப் பெற்றிருக்கிறார்; வல்லமையுள்ள ஒரு தெய்வம் கொழுத்த பூசாரிகளைப் பெற்றிருக்கிறது.

- சீனா எந்த விஷயத்திற்கும் திட்டமிட வேண்டியது மனிதன்; முடித்து வைக்க வேண்டியது இறைவன். - சீனா மண்ணால் செய்த சாமி ஆற்றைக் கடக்கும் பொழுது தன்னையே காத்துக்கொள்ள முடியாது. - சீனா