பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 53 துன்பமில்லாமல் இன்பமில்லை. -இங்கிலாந்து இன்பத்தில் நேரம் போவதே தெரியாது. -இங்கிலாந்து சொற்ப இன்பம், நீண்ட துயரம். -ஃபிரான்ஸ் அறிவாளி இன்பங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. மூடன் அவைகளுக்கு அடிமையாகி விடுகிருன். -கிரீஸ் இன்பங்கள் வரும்பொழுது கவனிக்க வேண்டாம், அவை போகும் பொழுது கவனிக்கவும். -கிரீஸ் இன்பம்தான் தீமைக்குப் பெரிய துாண்டுதல். -கிரீஸ் இன்பங்கள் நிலையற்றவை, பெருமைகளே நிலையானவை. -கிரீஸ் இன்பம் பனித்துளி போன்றது; அது சிரிக்கும் பொழுதே உலர்ந்து போய்விடும். -தாகூர் மனித உள்ளம், உழைப்பிலிருந்து இன்பத்தை நாடி, மலையி லிருந்து சரிவதுபோலப் பாய்ந்து செல்லும். -லத்தீன் நிதானமாக இன்பம் துய்த்தல் உடலுக்கு ஒய்வு போன்றது. -லத்தீன் கலப்பில்லாத தனி இன்பம் கிடையாது. -லத்தீன் அரிதாக வரும் இன்பத்திற்கு அருமை அதிகம். -லத்தீன் மனைவியை அடித்தவன், "என் இன்பத்திற்காக அடித்தேன்’ என்ருளும். -இங்கிலாந்து பின்னல் வருந்த நேராத இன்பமே யில்லை. -இங்கிலாந்து இன்பம் ஒரு பாவம், சில சமயங்களில் பாவமும் இன்பமாயிருக் கிறது. -பைரன் துன்பத்திற்குப் பின் இன்பம் இனிமையானது. -டிரைடன் 10—.L --نگ