பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 பெரிய துன்பங்கள் சிறு துன்பங்களை மறக்கச் செய்கின்றன. -ஜெர்மனி எல்லாத் துயரங்களையும் நீக்குதலே இன்பத்தின் எல்லை. -எபிக்யூரஸ் மகிழ்ச்சி மலர்ந்த முகம் சாதாரண உணவையே விருந்தாக்கி விடும். -இங்கிலாந்து இன்பமாயிருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். -இங்கிலாந்து தன் குழந்தைகளுடன் இன்பமாயிருப்பவனே இன்பமுள்ளவன். -இங்கிலாந்து மனிதன் மகிழ்ச்சிக்காகப் பிறந்தவனில்லை. -இங்கிலாந்து அறிவின் அறிகுறி இடைவிடாத முகமலர்ச்சி. -ஃபிரான்ஸ் இன்பம் என்பது பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியது. -ஃபிரான்ஸ் ஒருவன் இறக்கும்வரை அவன் இன்பமா யிருந்ததாகச் சொல்ல வேண்டாம். -ஃபிரான்ஸ் மகிழ்ச்சியுள்ள வழித்துணையால் வழியின் துாரம் குறையும். -ஜெர்மனி தன் நல்லதிருஷ்டத்தைத் தெரிந்திருப்பவன் மகிழ்ச்சியுடன் மனிதனுக்குரிய _ உண்மையான வேலையைச் செய்வதே அவனுக்கு இன்பம். -கிரீஸ் இன்பம் பொருமையை வளர்க்கும். -லத்தீன் இன்பமாயிருக்க இயற்கை எல்லோர்க்கும் வாய்ப்பளிக்கிறது: ஆளுல் மக்களுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும். -லத்தீன் அமைதியே இன்ப வாழ்வு. -லத்தீன்