பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 துரங்குகின்ற சோகத்தை எழுப்பவேண்டாம். -இங்கிலாந்து சோகங்கள் வந்தால், ஒற்றர்களைப் போல் தனித்து வருவ தில்லை; படைகளாகத் திரண்டு வரும். -இங்கிலாந்து சோகம் உரக்கக் கூவாது. -எஸ்டோனியா சோகமுள்ளவர் பேச முடியாவிட்டால், ஆவி துறக்க நேரும். -ஸெர்பியா அன்பு அன்பு என்னும் ஒடம் மலைமீது ஏறும். -இந்தியா அன்பிருந்தால், புளிய மரத்தின் இலையில் இருவர் படுக்கலாம். -இந்திய /Tr பருத்தியைப்போல் அன்பு செலுத்து: வாழ்க்கையில் அது ஆடையாக உன்னைக் காத்து, மரணத்திலும் உன் னுடனேயே வருகின்றது. -இந்தியா வாலில்லாத நாய் தன் அன்பை காட்ட முடியாது. -இலங்கை உன்னைச் சுமந்து செல்லும் குதிரையிடத்தும், உன்னேப் பாலூட்டி வளர்க்கும் பசுவினிடத்தும், உன் உடைமை களைக் காக்கும் நாயினிடத்தும் அன்பாயிரு. -துருக்கிஸ்தானம் உலர்ந்த காற்றில் பனி இராது வயது காலத்தில் அன்பு இராது. -8ன மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணிர்கூட இனிப்பா ஒருவனுடைய உள்ளத்திலுள்ள அன்பை அவன் கொடுக்கும் தொகையை வைத்து மதிப்பிட முடியாது. -சீன இதயத்தை விரிவாக்குவோன் வாயைச் சுருக்குவான். —(" ) பயன் கருதி அன்பு காட்டுவதைவிட, காட்டாமலிருப்பது மேல். -சீன அன்பை விதைத்தவன் நன்றியை அறுப்பான். -அரேபியா அன்புள்ள இதயம் எப்பொழுதும் இளமையோடிருக்கும். -Աե:5ri