பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 ஒநாயிடம் அன்பு செலுத்தல் ஆட்டுக்குக் கொடுமை செய்வ தாகும். -பாரசீகம் பாலும் முட்டையும் வேண்டுமென்ருல், பசுவையும் கோழியையும் பயமுறுத்தக் கூடாது. -திபேத்து அன்பு என்பது என்ன? மனித சமூகத்தை நேசித்தல். அறிவு என்பது என்ன? மனித சமூகத்தை அறிதல். -கன்பூவியஸ் வேண்டியவர்களுக்குக் கதவு விரைவில் திறக்கும். -வேல்ஸ் அன்பு குறைந்துவிட்டால், குறைகள்'பெரிதாகத் தெரியும். -வேல்ஸ் அன்பிருந்தால், சமாதானப் படுத்துவது எளிது. -வேல்ஸ் அன்புக்குரியவரை எளிதில் வசப்படுத்தலாம். -வேல்ஸ் பேரன் பேத்தி எடுத்த பிறகுதான் பூரணமான அன்பு மலரும். -வேல்ஸ் அன்பு அச்சத்தை விரட்டி விடும். -லெக் அன்பு குடிசைகளை மாளிகைகளாக்கும், நார்களைப் பட்டு நாடாக்களாக்கும். -எஸ்டோனியா உனக்கு அன்பு வேண்டுமானல், நீ அன்பு காட்டு. —( "" ) அன்புச் சோலைகள் வாடுவதே யில்லை. -கிரிஸ் உலகம் அன்பிலும் சமரசத்திலும் நிற்கின்றது. -ரவி:யா உன் அன்புக்கும் ஒர் அளவிருக்கட்டும். -ஸ்வீடன் வெறும் கையோடு வருதல் வெறுக்கத் தகுந்ததாகும். -ஆப்பிரிக்கா வீடு சிறிதாலுைம், நூறு நண்பர்களைக் கொள்ளும். -எகிப்து அன்பு வீணுகப் போயிற்று என்று சொல்லவேண்டாம்; அன்பு வீனனதேயில்லை. -அமெரிக்கா இரண்டு மனங்கள் ஒன்ருனல், வைக்கோல் தொட்டியும் அரண்மனையாகும். -கீழை நாடு