பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 உலகம் முழுவதும் ஈகை நிலைத்தால், பூமியே சுவர்க்கமாகும்: நரகம் என்பது கட்டுக்கதையாகும். -இங்கிலாந்து உண்டியலில் ஒர் அணுவைப் போட்டுவிட்டு, ஒரு ரூபாயை எடுத்துக் கொள்பவனும் உண்டு. -இங்கிலாந்து இதயத்தையே கொடுப்பவன் பணம் இல்லையென்று சொல்ல மாட்டான். -இங்கிலாந்து அழகான வார்த்தைகளை அள்ளிக் கொடுப்பவன் வெறும் கரண்டியால் ஊட்டப் பார்ப்பவன். -இங்கிலாந்து கொடுக்கும் கையே சேகரிக்கும். -இங்கிலாந்து நாம் கொடுத்ததுதான் நம்மிடம் இருப்பது: நாம் செலவழித்தது நம்மிடம் இருந்தது; நாம் விட்டுச் சென்றது நாம் இழந்தது. -இங்கிலாந்து கொடுப்பதுதான் செல்வரின் கடமை. -கதே ஏழைகளுக்கு அளியுங்கள், வானுலகில் நீங்கள் பெருநிதியை அடைவீர்கள். -புதிய ஏற்பாடு ஏழைகளிடம் இரக்கம் காட்டுவோன் கர்த்தருக்குக் கடன் கொடுப்பவன். -புதிய ஏற்பாடு சந்தோஷமாய்த் தானமளிப்பவனைக் கர்த்தர் நேசிக் இருர், -புதிய ஏ ற்பாடு தானம் செய்தல் பல பாவங்களை மறைத்துவிடும். —(” ) பெறுவதைவிடக் கொடுப்பதே புண்ணியமானது. —( " ) அறிவாளி செல்வத்தைப் புதைத்து வைப்பதில்லை; அவன் கொடுக்க கொடுக்கச் செல்வம் கூடிவரும். -சீன பின்னல் இரண்டு கொடுப்பதாகச் சொல்வதைவிட ஒன்றைக் கொடுத்தனுப்புதல் மேல். -ஃபிரான்ஸ் பிச்சை ஏற்று வாழ்வதைக் காட்டிலும், வாழாமையே இனிது. சீக்கிரமாகக் கொடுப்பவன் இரட்டிப்பாகக் கொடுத்தவ கிைருன். -லத்தீன் நன்மையைச் செய்; யாருக்கென்று கேளாதே. -ԱէԶոi