பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 உணவுக்கு உப்பைப் போல், செல்வத்திற்கு ஈகை. -ԱեՖrԻ அன்பில்லாமல் ஈந்தால், பெரிய பரிசுகளும் அற்பமாகிவிடும். -யூதர் பெரிதாக வாக்களிப்பதைவிட, சிறிதளவு ஈவது மேல். -ஜெர்மனி பரிசுகள் தெய்வங்களையும் அனுகூலமாக்கும். -கிரீஸ் பரிசு மலிவானதுதான், ஆனால் அன்பு அரிதானது. -ரஷ்யா பரிசுகள் பாறைகளை உடைக்கும். -ஸ்பெயின் வாங்கியே பழகிய கைக்குக் கொடுப்பதென்ருல் கடினம்தான். -அரேபியா ஈகையால் ஏழையானவர் இல்லை. -இத்தாலி கொடுக்கிற கை ஏந்துகிற கைக்கு மேலே இருக்கும். -துருக்கி கொடுக்கக் கூடியவனுக்கு நண்பர்கள் அதிகம். -ஃபிரான்ஸ் கொடுப்பது செல்வர்களின் கடமை. -கதே நீ கொடுப்பது மணலில் எழுதப்படும், நீ பெறுவது இரும்புக் கையால் எழுதப்படும், -ஜெர்மனி எவருக்கு அளிக்கிருேம் என்பதில் கவனமாயிருக்கவும். -லத்தீன் ஈகைக்கு எல்லையில்லை. -லத்தீன் நான் கொடுத்ததெல்லாம் இன்னும் என்னிடத்திலேயே இருக் கின்றன. -லத்தீன் கொடுப்பதற்கும் சேமிப்பதற்கும் அறிவு வேண்டும். -ஸ்பெயின் பொது மக்களுக்கு அளிப்பவன் எவருக்கும் கொடுத்ததாகாது, -ஸ்பெயின் நாமாக அளித்தல் பெருமை, இழத்தல் துக்கம். -ஸ்பெயின் ஒருவன் ஏழையா யிருந்தால்தான் ஈகையின் இன்பம் தெரியும். -இங்கிலாந்து