பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கொடுப்பதில் நேரம் கடத்துபவன், கொடுக்கும் முறையை அறியாதவன். -இங்கிலாந்து ஒரு கணத்தில் கொடுப்பவன் இரட்டிப்பாகக் கொடுத்தவ வைான் -இங்கிலாந்து எனக்கு வெந்த இறைச்சியைக் கொடுத்துவிட்டு, பிறகு கம்பியால் அடித்தாலும் பட்டுக் கொள்கிறேன். -( ' ) கொடுத்துச் செலவழித்ததைக் கடவுள் நிரப்பிவிடுவார். -இங்கிலாந்து y த யா ள ம் கனிந்த பழங்களுள்ள மரத்தை அதிகமாக உலுப்ப வேண்டாம். -ஸ்விட்சர்லாந்து கனி மரத்தை எல்லோரும் உலுப்புவர் -இந்தியா காய்த்த மரம் கல்லெறி படும். -தமிழ்நாடு பசுமையான மரத்தில் நிறையக் கிளிகள் இருக்கும். --இந்தியா தயாள குணத்தின் கதவைத் திறப்பது கஷ்டம், (திறந்தபின்) அடைப்பது கஷ்டம். -சீன வீரமுள்ள மனிதர்களுக்குத் தயாளமுள்ள இதயங்கள் உண்டு. -அமெரிக்க நாடோடிகள் குடிசையின் கதவு விசாலமானது. -அயர்லாந்து ஒ விருந்தினர்களே, வாருங்கள். நாம் உணவருந்தத் தொடங்கு வோம். -ஆப்பிரிக்கா இனிய நீருள்ள கிணறு காலியாகவே இருக்கும். -எகிப்து உ ேலாபம் வெறும் கையை நக்குவாரில்லை. -ஆப்பிரிக்கா எச்சில் கையால் காக்கை விரட்டமாட்டான். -தமிழ்நாடு உலோபியின் சேமிப்பு மண்ணுக்குத்தான் ஆதாயம். H -இந்தியா